முதபெல்

தேதி: January 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

திருமதி தளிகா அவர்கள் வழங்கியுள்ள முதபெல் என்ற அரேபிய வகை உணவுக் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தளிகா அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய வகைக் கத்தரிக்காய் - ஒன்று
டாஹினி - அரை கப்புக்கும் சற்று குறைவாக
பூண்டு - ஒரு பல்
லெமன் சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
பார்ஸ்லி (அலங்கரிக்க)


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து ஐந்து, ஆறு இடங்களில் நீளமாக, ஆழமாகக் கீறிக் கொள்ளவும். துண்டுகள் பிரிந்துவிடக் கூடாது.
அப்படியே ஒரு தட்டில் வைத்து 5 நிமிடத்திற்கு அதி உயர் வெப்பநிலையில் மைக்ரோவேவ் செய்யவும். பிறகு நான்கு அல்லது ஐந்து முறை, காயை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் போட்டு ஒவ்வொரு முறையும் இரண்டிரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும். தேவையானால் மேலும் ஒன்றிரண்டு நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
தொடக் கூடிய அளவுக்கு ஆறியதும் துண்டுகளைப் பிரித்து தலைப் பகுதியில் மட்டும் சிறிது வெட்டி நீக்கிவிட்டு, மீதிச் சதைப் பாகத்தை, கத்தியின் பின் பக்கத்தைக் கொண்டு வழித்து எடுக்கவும்.
நன்கு ஆறவிட்டு, டாஹினி, பூண்டு, லெமன் சாறு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு பேஸ்ட் போல் அடித்து, அகலமான பாத்திரமொன்றில் பரப்பவும்.
அதன் மேல் ஆலிவ் எண்ணெயை ஊற்றி, பார்ஸ்லி இலையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

முதபெல் (Moutabel - Egg plant Dip) குபூஸ் போன்ற உணவுகளுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் அரபு வகை உணவு.

இதை க்ராக்கர்ஸுக்கு டிப்பாகவும் வைக்கலாம். காரம் விரும்புபவர்கள் மிளகாய்த் தூள், குறுமிளகுத் தூள் சேர்த்துச் செய்யலாம்.

காய், வைத்த தட்டு இரண்டுமே சூடாக இருக்கும். கையைச் சுட்டுக் கொள்ளாமல் அவதானமாக இருக்கவும். காயை அவனில் வைப்பதானால் கீறத் தேவையில்லை. முழுக் காயாக வைத்து 40 நிமிடங்கள் ரோஸ்ட் செய்யவும். ஆறியதும் தோலை உரித்து எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்