தேதி: January 12, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி குமாரி அவர்களின் அவரை முட்டை பொரியல் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய குமாரி அவர்களுக்கு நன்றிகள்.
பட்டை அவரை - கால் கிலோ
முட்டை - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை
தாளிக்க:
வெங்காயம் - பாதி
கடுகு - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

அவரைக்காயைக் கழுவி நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

வெங்காயத்தை அரிந்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை இரண்டாக உடைத்துப் போடவும்.

அத்துடன் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை வேக வைத்த அவரைக்காயுடன் சேர்க்கவும்.

அவரைக்காயிலுள்ள தண்ணீர் வற்றியதும், முட்டையை அப்படியே உடைத்து ஊற்றி, நன்றாகக் கிளறிவிட்டு, முட்டை சுருண்டு அவரையுடன் சேரும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

சுவையான அவரை முட்டை பொரியல் தயார். விரும்பினால் கடைசியாகத் தேங்காய் சேர்க்கலாம்.

Comments
இமா
சூப்பரான குறிப்பு.. எனக்கும் ரொம்ப பிடிச்சுது :) நீங்க தேர்வு செய்ததால் இந்த குறிப்பை செய்து பார்க்க முடிந்தது. சுவையான குறிப்புக்கு நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அவரை முட்டை பொரியல்
எனக்கும் பிடித்திருந்தது வனி. நீங்கள் பகிர்ந்திருந்த படம் பார்த்தேன். நான் செய்ததை விட சிறிது வித்தியாசமாகத் தெரிந்தது. அடுத்த தடவை (முட்டை) உங்கள் டிஷ்ஷில் இருந்தது போல வர சமைக்கப் போகிறேன். :-)
குமாரி இதைப் பார்ப்பாங்களா என்று தெரியாது. குறிப்பைக் கொடுத்த அவங்களுக்கு என் நன்றி. :-)
- இமா க்றிஸ்
நன்றி இமா.....
இப்போ தான் பார்க்கிறேன் இமா.... ரொம்ப சந்தோசமா இருக்கு... என்ன ஒரு ஒற்றுமை என்றால்...இப்போ தன அவரைக்காய் பொரியல் வேற யாரவது செய்ததை பார்க்கலாம் என்று வந்தேன்..அதில் என் குறிப்பும் இருந்தது ...நான் எப்படி சொல்லி இருக்கேன்னு பார்த்தேன் ..இன்ப அதிர்ச்சி நீங்க என் குறிப்பை செய்து இருக்கும் லிங்க் பார்த்தேன் ..தாமதமாக பார்த்தற்கு வருந்துகிறேன்..நன்றி இமா செய்து பார்த்து படங்களும் இங்கே கொடுத்து அசத்திடிங்க..
நன்றி வனி...நீங்க செய்த குறிப்பு லிங்க் கொஞ்சம் குடுக்க முடிந்தால் குடுங்க....எங்க இருக்குனு தேடி பார்க்கிறேன் நானும்...
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪