வனிலா ஐஸ்க்ரீம்

தேதி: January 12, 2015

பரிமாறும் அளவு: 5 அல்லது 6 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட செல்லி அவர்களின் வனிலா ஐஸ் கிரீம் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய செல்லி அவர்களுக்கு நன்றிகள்.

 

டின் பால் - ஒரு டின்
தண்ணீர் - ஒரு டின் & அரை ரின்
பால் மாவு - 2 மேசைக்கரண்டி
சீனி - 2 மேசைக்கரண்டி
கஸ்டர்ட் பவுடர் - 2 தேக்கரண்டி
வனிலா - 2 தேக்கரண்டி
இளஞ்சூடான நீர் - அரை கப்


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
டின் பாலுடன் தண்ணீர், சீனி சேர்த்துக் கலந்து வடித்து வைக்கவும்.
பால் மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து வைத்துள்ள பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும்.
கஸ்டர்ட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த கஸ்டர்ட் கலவையை பாலுடன் சேர்த்துக் கலந்து இறக்கி ஆறவிடவும்.
அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் (Beater) அடித்து, குளிரூட்டியில் (Freezer) வைக்கவும்.
மீண்டும் சில மணி நேர இடைவெளிகளில், இரண்டு மூன்று தடவைகள் வெளியே எடுத்து அடித்துவிட்டு குளிரூட்டவும்.
இறுதித் தடவை அடித்த பிறகு மூடியுடன் கூடிய கொள்கலனுக்கு மாற்றி மூடி வைக்கலாம்.
நன்றாகக் குளிர்ந்து இறுகியதும் ஐஸ் க்ரீம் பரிமாறும் கிண்ணங்களில் இட்டுப் பரிமாறவும்.

கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் ஒரு லிட்டர் அளவு ஐஸ் க்ரீம் கிடைக்கும்,


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Wow...
Supera rukae sister...
Enakum icecreamsna pidkm..one time panan..but olungha varala .tin milk na milkmaid dana condensend milkdana.

ஐஸ்கீரிம் சூப்பர்.. நானும் வெண்ணிலா ஐஸ்கீரிம் செய்தேன் பட் கொஞ்சம் வித்தியசமா உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்மா.. சூப்பர்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எனக்குப் பிடிச்ச வனிலா ஐஸ்க்ரீம். செய்து பார்த்தது இல்லை செய்து பார்கிறேன்.வாழ்த்துக்கள் இமாம்மா.

//tin milk na milkmaid dana condensend milkdana.// ஆமாம், அதேதான்.
//but olungha varala// காலைல செய்ய ஆரம்பியுங்க. ஆறுவதற்கு எடுக்கும் நேரம் + ஃப்ரீஸிங், அதுக்கு இடைப்பட்ட நேரம் எல்லாம் சேர்த்து சரியாக வரும். இரவில் செய்தால் காலை எழுந்து பார்க்க நன்றாகக் கெட்டியாகி இருக்கும். பிறகு இளகவிட்டு அடிக்க வேண்டும். டெக்க்ஷர் நன்றாக வராது.

முன்னாலயே ஃப்ரீஸர்ல இடம் செட் பண்ணி வைச்சிருங்க. பீட் பண்ற பாத்திரம் அப்படியே ஃப்ரீஸருக்குப் போகும். அதனால் மெட்டலாக இருந்தால் நல்லது. (ப்ளாஸ்டிக், கண்ணாடி & செரமிக் வெடிக்கும் சாத்தியம் இருக்கிறது.) 2 மணிக்கு ஒரு தடவை எடுத்து பீட் பண்ணுங்க. நான்காவது அல்லது ஐந்தாவது தடவை உங்களுக்கே சரியாக வந்திருப்பது தெரியும்.

பால்மா... fat free சரிவராது.

‍- இமா க்றிஸ்

Thanks....akka.
Congrts.unghaloda ella recpesum suprarku..

nice icecream..
what is the measurement of water and condensed milk.. tin means howmuch..
please let me know...

//the measurement of condensed milk..// 1 can = 400 கிராம்ஸ். பால் முழுவதையும் வழித்து எடுக்க வேண்டும்.
//the measurement of water// பாற்பேணியில் நீர் நிரப்பி ஒன்றரைப் பேணி நீர். (பேணியில் ஒட்டி இருக்கும் மீதிப் பாலை அப்படியே கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.)
//tin means howmuch..// வெற்றுப் பாற்பேணியால் அளப்பது = 300 ml.

‍- இமா க்றிஸ்

இமா ,
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..
என்ன சொல்வது உங்களுக்கு ரொம்ப பொறுமை ..அனைத்தும் கண்களுக்கு விருந்து

என்றும் அன்புடன்,
கவிதா

அக்கா ஐஸ்க்ரீம் செய்து சாப்டாச்சு. சூப்பர். முகப்புத்தகத்தில் படம் போட்டுருக்கேன். ரொம்ப நல்லா வந்தது. தேங்க்ஸ் அக்கா. :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா