மில்க் புட்டிங்

தேதி: January 12, 2015

பரிமாறும் அளவு: 5 - 6 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி ஜுலைஹா அவர்களின் மில்க் புட்டிங் என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.

 

கன்டெண்ஸ்ட் மில்க் - அரை டின்
பசுப்பால் - முக்கால் டின்
முட்டை - 3
சீனி - 4 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 3 துளிகள்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பசுப்பாலைக் காய்ச்சி ஆறவிடவும்.
முட்டையை நன்கு அடித்துக் கலக்கவும்.
அத்துடன் டின் பாலை ஊற்றி கலக்கவும்.
காய்ச்சிய பாலுடன் முட்டைக் கலவை, எசன்ஸ் மற்றும் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு, அடுப்பைப் பற்றவைத்து பாத்திரத்தைச் சுற்றிலும் சூடுகாட்டினால் சீனி உருகி காரமல் ஆகும்.
பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு, காரமலை விரைவாக புட்டிங் ஊற்றி வைக்கவென்று எடுத்து வைத்துள்ள கிண்ணத்திற்கு மாற்றவும். கிண்ணத்தின் எல்லாப் பக்கங்களிலும் காரமலை படரவிடவும்.
அதில் முட்டைக் கலவையை ஊற்றவும்.
பிறகு அதனை 20 நிமிடங்கள் நீராவியில் வேகவிட்டு எடுத்து, குங்குமப்பூவை மேலே தூவிவிடவும்.
ஆறியதும் காரமல் மேலே வருவது போல ஒரு தட்டுக்கு மாற்றி, துண்டுகள் போட்டுப் பரிமாறலாம். துண்டுகளின் மேல் மேலதிகமாக சிறிது காரமல் ஊற்றிப் பரிமாறவும்.

இதனைச் சிறிது குளிரூட்டியும் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் இமாம்மா .எனக்கு இந்த புட்டிங் ரொம்ப பிடிக்கும். செய்து பார்க்கிறேன் .

Be simple be sample

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள் இமாம்மா. குறிப்பு எல்லாம் அருமை. புட்டிங் வெகு ஜோர். என் குட்டிஸ்க்கு புட்டிங் ரொம்ப‌ இஷ்டம். செய்து பார்க்கிறேன். மீண்டும் வாழ்த்துக்கள் இமாம்மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

கிச்சன் ரானி இம்மா வாழ்த்துக்கள் எல்லாமே சூப்பர் புட்டிங்&வெனிலா ஐஸ்கிரீம் சூப்பரோ சூப்பர்

Egg saerkamal indha putting pana mudiuma.
Egg smell idhula adikuma konjam solungha.

இன்றைய கிச்சன் குயின் (இப்போ சொல்லலாம்ல) எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. :* ரொம்ப அழகா இருக்கு இன்னைக்கு முகப்பு உங்கள் பளீச் படங்கள் பார்க்கும் போது.. வாழ்த்துகள் அம்மா.. நிச்சயம் இதை ட்ரை பண்றேன்.. பண்ணிட்டு ஒரு கிளிக் போடுறேன்.. சூப்பர்ம்மா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாழ்த்துக்கள் இமாம்மா...
அனைத்துக் குறிப்புகளுமே அருமையாக‌ செய்து காட்டியுள்ளீர்கள்! சூப்பர்! படங்கள் அனைத்தும் அருமை! அருமை! கலக்கலா வந்திருக்கு!

இன்றைய‌ கிச்சன் குயின் இமாம்மாவுக்கு ஹேமாவின் இதயங்கனிந்த‌ வாழ்த்துக்கள். மில்க் புட்டிங் சூப்பர்மா, அனைத்து படங்களும் ரொம்ப‌ அருமைமா, முகப்பு ஜொலிக்கின்றது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

//Egg smell idhula adikuma// கண்டென்ஸ்ட் மில்க் & வனிலா, இரண்டும் போடுறதால வராது. என் பக்கமிருந்து வரும் குறிப்பு எதுவும் முட்டை வாடை வராததாகத் தான் இருக்கும் சுல்தானியா. எனக்கும் முட்டை வாடை பிடிக்காது. :-) நீங்க பயமில்லாமல் ட்ரை பண்ணலாம்.

//Egg saerkamal indha putting pana mudiuma.// இல்லை. ரெஸிபில இன்க்ரேடியன்ஸ், அளவு, சமையல் முறை எல்லாம் மாறும். பெயரே முழுசா மாறிரும்.
ஜெலடின் சேர்த்தால் அது ஜெலி. கஸ்டர்ட் போட்டால்... கஸ்டர்ட். (இரண்டுக்கும் ஸ்டீமிங் சரிவராது.) corn flour சேர்த்தால் வேற டெக்க்ஷர் & சுவை கிடைக்கும்.

முட்டை சேர்த்தால் மட்டும்தான் சரியான டெக்க்ஷர் & சுவை கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

Thank u so much...akka.
For u r kind details....
Na kandpa idha try panvan.pa.
Unghaloda ella recpiesmae enku pana asadan..
Na ipodan joint panrkan idhula.so onuona pana kathupan..

ஜுலைகாவுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.

வாழ்த்திய சுமி, நிஷா, ரேவ்ஸ் x 2, அனு & ஹேமாவுக்கு என் அன்பு நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா,

புட்டிங் அருமையா இருந்துச்சு.எனக்கு காரமல் கிண்ண்த்துலையே ஒட்டிக்குச்சு.அப்பறம் அதை ஹனி லேயர் மாதிரி வச்சு சாப்பிட்டோம். சுவை அலாதியா இருந்தது.

//காரமல் கிண்ண்த்துலையே ஒட்டிக்குச்சு.// காரமல் கொஞ்சம் அதிகமா சூடாகி இருக்கு.

அடுத்த தடவை முதல்லயே கிண்ணத்தை ரெடியாக்கி வைச்சிருங்க. கிண்ணத்தை நனைத்து நீரை வடித்து வைக்க வேண்டும். பிறகு காரமலை ரெடியாக்குங்க. தேவைக்கு மேல் பாத்திரத்தைச் சூடாக்க வேண்டாம். சட்டென்று ஊற்றிச் சுழற்றிவிட்டு மேலே புடிங் மிக்க்ஷரை ஊற்றுங்க.

சூடாக்கப் பயன்படுத்திய பாத்திரத்தினுள் இருக்கும் நேரம், அந்தச் சூட்டிலும் காரமல் கொஞ்சம் இறுகும். முடிந்த வரை தயாரான உடனே கிண்ணத்திற்கு மாற்றிவிட வேண்டும்.

‍- இமா க்றிஸ்