தேதி: January 13, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுமதி ராஜேந்திரன் அவர்களின் பாதாம் கீர் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுமதி அவர்களுக்கு நன்றிகள்.
பாதாம் பருப்பு - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
கேசரிப் பவுடர் - அரைத் தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய் - 6
பால் - அரை லிட்டர்
ஒரு பாத்திரத்தில் பாதாம் பருப்பைப் போட்டு, சூடான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு தோலை உரித்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த பாதாம் விழுது, ஒரு லிட்டர் தண்ணீர், பால், சர்க்கரை, கேசரிப் பவுடர் ஆகியவற்றைச சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கி குங்குமப்பூ மற்றும் பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து வைக்கவும்.

டேஸ்டி பாதாம் கீர் ரெடி. க்ளாஸில் ஊற்றி பரிமாறவும்.

Comments
nithya akka
wow.superarku..nanum idhu panrkn..safron add panala.adana
indha texture varala..superarku.knonjam parcel katungha
enakha.