தேதி: January 13, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. நித்யா கோபால் அவர்கள் வழங்கியுள்ள சந்தேஷ் என்கின்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு சில மாற்றங்கள் செய்து விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.
பனீர் - 100 கிராம்
பால் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
ரோஜா எசன்ஸ் - 2 சொட்டு
பாதாம்
குங்குமப்பூ
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

மிக்ஸியில் பனீர், பால் சர்க்கரை, ரோஜா எசன்ஸ் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

அரைத்தவற்றை ஒரு தவாவில் போட்டு சிம்மில் வைத்து, ஈரப்பதம் போகும் வரை நன்கு கிளறிவிடவும். தீய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆற வைத்து சிறு உருண்டை போல் உருட்டி கையால் மெதுவாக அழுத்தவும். நடுவில் குங்குமப்பூ மற்றும் பாதாம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

நாண் ஸ்டிக் தவாவில் செய்தால் ஒட்டாமல் கிளறுவதற்கு சுலபமாக இருக்கும்.
Comments
சமையல் ராணி
இன்றைய சமையல் ராணி நித்தியாக்கு என் வாழ்த்துகள்.. படங்கள் அனைத்தும் சூப்பர்ப்பா.. அனைத்து குறிப்புகளும் ரொம்ப அழகா செய்திருக்கீங்க.. வாழ்த்துகள் நித்தியா..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
நித்யா
கிச்சன் குயின் நித்யாவிற்க்கு வாழ்த்துக்கள்.எல்லா குறிப்பும் அழகு. இந்த சந்தேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
அன்புடன்
பாரதி வெங்கட்
நித்யா
இன்றைய கிச்சன் குயின் நித்யாவுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பு எல்லாம் அருமை. மேலும் குறிப்புகள் வழங்க என் வாழ்த்துக்கள்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
நித்யா
வாழ்த்துக்கள். நித்யா.எல்லா ரெசிபியும் சூப்பரா இருக்கு
Be simple be sample
இன்றைய சமையல் ராணி நித்யாக்கு
இன்றைய சமையல் ராணி நித்யாக்கு என் வாழ்த்துகள்..அனைத்து குறிப்புகளும் ரொம்ப அழகா செய்திருக்கீங்க.. வாழ்த்துகள் நித்யா..
நித்யா,
நித்யா ,
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..
அனைத்து குறிப்பும் அருமை ..
என்றும் அன்புடன்,
கவிதா