அரிசி பணியாரம்

தேதி: January 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பச்சரிசி - 400 கிராம்
புழுங்கல் அரிசி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 300 கிராம்


 

முதல் நாளே பச்சரிசியுடன் புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்தவற்றை மறுநாள் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள மாவை எடுத்து, அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காயந்தவுடன், கலந்து வைத்துள்ள மாவை ஒரு குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றி வேகவிடவும். பணியாரம் வெந்து மேலே வரும் போது, திருப்பிப் போட்டு நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான அரிசி பணியாரம் தயார். சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் சுவா. எல்லா ரெசிபியும். சூப்பர்.

இன்றைய கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். குறீப்பு எல்லாம் செமையா இருக்குங்கோ. படங்கள் எல்லாம் உஜாலா போட்ட மாதிரி பளிச்சுன்னு இருக்கு. வாழ்த்துக்கள் சுவா....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நிஷா வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி கண்ணு வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கோ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.