தேதி: January 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜுலைஹா அவர்களின் முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.
முருங்கைக்கீரை - 5 கப்
சுண்டைக்காய் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - அரை கப்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கீரையைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுண்டைக்காயைப் பாதியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.

பிறகு கீரையைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் தயார்.

Comments
நன்றி
சத்தான சுவையான குறிப்பை கொடுத்த ஜுலைஹாவுக்கு நன்றிகள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.