கத்தரிக்காய் துவையல்

தேதி: January 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லீலா சக்தி அவர்களின் கத்திரிக்காய் துவையல் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லீலா அவர்களுக்கு நன்றிகள்.

 

கத்தரிக்காய் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 8
மல்லி - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
புளி - சிறு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு


 

கத்தரிக்காய் மற்றும் வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிறிது தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாய், மல்லி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் அவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
பிறகு வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, எண்ணெயை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வதக்கிய கத்தரிக்காய் துண்டுகளை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்க்கவும்.
பிறகு அதனுடன் புளிக் கரைசல், உப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
சுவையான கத்தரிக்காய் துவையல் ரெடி. கடுகு தாளித்துச் சேர்த்துப் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Last padam alaghu. Parkka colour full a iruku

நசீரா மிக்க நன்றிங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hai Swer, eppadi erukkiga? samayalla asaththuriga pola super :)contraz.

உன்னை போல பிறரையும் நேசி.