கூட்டாஞ்சோறு

தேதி: January 15, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுந்தரி அவர்களின் கூட்டாஞ்சோறு குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுந்தரி அவர்களுக்கு நன்றிகள்.

 

அரிசி - 2 கப்
வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
காரட் - ஒன்று
பீன்ஸ் - 15
சிறிய முள்ளங்கி - 6
காலிஃப்ளவர் - கால் பகுதி
கத்தரிக்காய் - 2
முளைக்கட்டிய பச்சைபட்டாணி, லீமா பீன்ஸ் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - தேவைக்கு
பூண்டு - 3
அரைக்க :
தேங்காய் - அரை மூடி
சின்ன வெங்காயம் - 2
சீரகம், மிளகு, வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க :
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் - ஒரு மேசைக்கரண்டி
நல்லெண்ணெய், நெய் - தேவையான அளவு


 

காய்கறிகள் அனைத்தையும் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும். பருப்பை நல்லெண்ணெய், பூண்டு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து மசிக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்கறிகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
பிறகு குக்கரில் அரிசி, புளிக் கரைசல், பருப்பு, காய்கறி, அரிசி, உப்பு, சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்.
நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். கடைசியாக ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
சுவையான கூட்டாஞ்சோறு தயார்.

சாம்பார் பொடி செய்முறை <a href="/tamil/node/24050"> சாம்பார் பொடி </a>

ஆல் பர்பஸ் பொடி செய்முறை <a href="/tamil/node/15911"> ஆல் பர்பஸ் பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்புகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். கூட்டாஞ்சோறு செமையா இருக்கு. படங்கள் நல்ல‌ தெளிவு. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய சுந்தரி அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

சுமி,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா