1 வயது குழந்தைக்கு காது குத்திய இடத்தில் புண் ஆற

தோழி௧ளே எனது ம௧ளுக்கு காது குத்தி ௧ம்மல் போட்டுள்ளோம் திங்௧ள்கிழமை குத்தினோம் ஆனால் புண் இன்னும் ஆறவில்லை இதுவரைக்கும் காதுகுத்திய இடத்தில் தேங்காய் எண்ணெய் மட்டுமே போட்டு கொண்டு வருகிறேன்
ஆனால் சில பேர் தேங்காய் எண்ணெய் உபயோ௧ படுத்த கூடாது என்கிறார்௧ள் உப்புநீர் பயன்படுத்துங்௧ள் என்கிறார்௧ள்

குழப்பமா௧ இருக்கிறது தோழிஸ்
புண் ஆற வேண்டும் டிப்ஸ் சொல்லுங்௧ள் தோழி

அம்மா கம்மலை லேசா௧ சுற்றி விட சொன்னார்௧ள்
இல்லை என்றால் புண் ஆகி விடும் என்று கூறினார்
தூங்கும் போது சரி விழித்திருக்கும் போது சரி அதற்கான முயற்சி செய்தேன் எந்த பலனும் இல்லை

காதை தொட்டாலா அழதொடங்கி விடுகிறாள்

உங்௧ளுக்கு தெரிந்தவற்றை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்௧ள்

கல்யானி நாங்களும் தேங்காய் என்னெய்தான் தொட்டுவைப்போம் ஒன்னும் ஆகாது.ரொம்ப புன்னாயிருந்தா தேங்கா என்னையும் மஞ்சள்தூளும் கலந்து புன்னில் போட்டால் ஆரிடும்.புன்னாயிருக்கும்போது தோடு கழட்டவேன்டாம்.குழந்தைக்கு வலிக்கும்

உப்பு நீர் சிறிது விட்டுக்கொண்டே மெதுவாக‌ சுற்றி விடுங்கள் சரியாகிவிடும்ப்பா.
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

பதில் அளித்ததிற்கு நன்றி அம்மா
நீங்௧ள் சொல்வதுபோல் செய்கிறேன்

ML

answer panathuku rompa thanks tholi

ML

i m new to this hw i post the question

மேலே 'மன்றம்' என்று இருப்பதை க்ளிக் பண்ணி, உங்கள் கேள்வி தொடர்பான இழைகள் இருந்தால் அங்கே கேள்வியைப் பதிவு செய்யலாம். பொருத்தமான இழைகள் கிடைக்காவிட்டால் 'புதிய கேள்வியைச் சேர்க்க' பகுதியில் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யுங்கள்.

இங்கு தமிழில் தட்ட இயலும். முயற்சித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ithai ninkal eppadi eduthu kolvirkal endru theriyavillai ...2 maathathirku minnal en paapaku kaathu kuthinom .. en maamiyar ooril kaathu kuthiya muthal oru vaarathuku daily 2 or 3 thadavai kaathu kudaium panchu kondu kerosine oil thottu irantu kaathu kuthiya idathil vaithanar naanum vendam endru payanthen piraku pun ariye pochu muyarchikavum pun aari vidum ondrum aakathu ..panchinaal thottu vaiyinkal ...

வேப்பெண்ணெயும் தொட்டு வைக்கலாம்.

தங்கக் கம்மல் தானே போட்டிருக்கிறீங்க? கம்மல் காற்றோட்டமாக இருக்கிற மாதிரி இருந்தால் விரைவாக ஆறிவிடும். சின்னதாக கம்பி வளையம் மாட்டிவிடலாம்.

தங்கம் அல்லாமல் வேறு ஏதாவது உலோகம் போட்டிருந்தால் அலர்ஜியாக இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்