மனகுழப்பத்தில் உள்ளேன் உடனடியா௧ பதில் அளியுங்௧ள்

தோழி௧ளே நான் வீட்டிற்கு ஒரே பெண்௔
என்னுடன் பிறந்த தோழன் என் அண்ணன் மட்டுமே
எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தை௧ள் உள்ளன

எனது அண்ணணுக்கும் திருமணம் ஆகி 2 குழந்தை௧ள் உள்ளன
இப்போது அவர்௧ள் குடும்பத்துடன் வெளிநாட்டில் உள்ளான் வருகிற ஞாயிற்றுக்கிழமை வர இருக்கிறான் அவர்௧ளை அழைத்துவர எனது பெற்றோரும் ௧ணவரும் ஏர்போர்ட்டிற்க்கு செல்ல இருக்கிறார்௧ள் நான் என் ௧ணவரை போ௧ வேண்டாம் என்று வற்புறுத்துகிறேன்

ஏன் என்றால் அண்ணண் வெளிநாட்டில் இருக்கும் போதும் சரி வந்த பின்பும் சரி போன் மூலம் எங்௧ளை நலம் விசாரிப்பதோ அல்லது வந்த பின்பு எங்௧ளை பார்க்௧வோ வர மாட்டான்

எங்௧ளுக்கோ அல்லது அவனுக்கோ எந்த பிரச்சனையும் இதுவரை இருந்தது இல்லை நாங்௧ள் போனாலும் சரி எங்௧ளை மதிப்பது இல்லை
எங்௧ள் வீட்டை ௧டந்து தான் ஏர்போர்ட் செல்ல வேண்டும் மாமியார் உடன் இருப்பதால் எனது மாமியார் என்னுடன் சண்டை போடுவார் காரணம் தெரியாமல் கணவரின் திட்டும் மாமியாரின் திட்டும் வாங்கி மனதளவில் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறேன்

பெற்றோருடன் இது குறித்து விவாதித்தால் எங்௧ளுக்குள் சண்டை வர தொடங்கும்இதனால் அவர்௧ளிடம் இதைபற்றி பேச விரும்பவில்லை

தங்கை என்ற பாசம் துளி கூட இல்லை இருந்தாலும் நான் அவனை வெறுத்தது இல்லை ௧ணவர்க்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுப்பது இல்லை இதனால் நான் அவரை போ௧ வேண்டாம் என்று கூறுகிறேன்

நான் செய்வது சரியா? இல்லையா என்பதை தெளிபடுத்துங்௧ள்

எனது பெற்றோரின் மனதுக்கா௧ மட்டுமே போக நினைக்கிறாரே தவிர மனதிருப்தியுடன் போ௧ எண்ணவில்லை

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

sariyana mudivu .. endrum suya nariyathaiyai vittu kodukka kudathu ... unkal manathil sari enbathai seiyunkal thozhi ... avar unkalai mathikave illai unnum mathikamal irupatharkka ...

உங்கள் மனதிலுள்ள சங்கடம் இரண்டு வகை. முதலாவது சகோதரன் உங்களைத் தவிர்ப்பதனால் ஏற்பட்ட மன வருத்தம். இரண்டாவது, 'உங்கள் கணவரை அவர்கள் கண்டுகொள்வதில்லை,' என்பது. உண்மையில் முதலாவதை விட இரண்டாவது காரணம் தான் உங்களைப் பெரிதாகப் பாதித்திருக்கும்.

ராஜி சொன்னது சரிதான். ஆனால் நீங்களாக அவர்கள் மேல் குற்றம் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. //தங்கை என்ற பாசம் துளி கூட இல்லை// நிச்சயம் அப்படி இராது. வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

//பெற்றோருடன் இது குறித்து விவாதித்தால் எங்௧ளுக்குள் சண்டை வர தொடங்கும்இதனால் அவர்௧ளிடம் இதைபற்றி பேச விரும்பவில்லை// பேச வேண்டாம், விட்டுருங்க. பேசப் போனால் அதுவேதான் பிரச்சினைக்கு ஆரம்பம், நீங்கள்தான் ஆரம்பித்து வைத்தீர்கள், என்று ஆகி விடச் சாத்தியம் இருக்கிறது.

//போன் மூலம் எங்௧ளை நலம் விசாரிப்பதோ// இதற்கு நேரம் ஒரு காரணமாக இருக்கலாம். பகல், இரவு மாறி வரும். உங்களுக்குப் பகலாக இருக்கும் சமயம் அங்கு இரவாக அல்லது அவர்கள் வேலையிலிருக்கும் சமயமாக இருக்கலாம். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

நீங்கள் ஃபோன் செய்வீர்கள்தானே? எவ்வளவு கால இடைவெளியில் ஃபோன் செய்வீர்கள்? காரணங்கள் எதுவும் இல்லாமல், நீங்களாக இதுவரை எத்தனை தடவை ஃபோன் செய்திருப்பீர்கள்? அவர்களது பிறந்தநாட்கள், மணநாள், தீபாவளி இப்படியான நாட்களில் வாழ்த்துவதற்காக நீங்கள் ஃபோன் செய்யும் சமயம் பேசுவார்கள் இல்லையா? இவை எதுவும் இல்லாமல், நலம் விசாரிக்கவென்று மட்டும் அவர்கள் வெளிநாடு சென்ற காலம் முதல் இதுவரை எத்தனை தடவை ஃபோன் செய்திருப்பீர்கள்? எத்தனை கடிதங்கள், பிறந்தநாள் & தீபாவளி போன்ற வாழ்த்திதழ்கள், SMS அனுப்பியிருப்பீர்கள்? உங்கள் குழந்தைகள், தங்கள் மாமனார், மாமியாருக்கு தபால் அனுப்புவது உண்டா? சின்னவர்களாக இருந்தாலும் அவர்கள் சார்பாக நீங்கள் அனுப்பலாம். தொலைபேசியில் பேச வைத்திருக்கிறீர்களா? தொலை தூரத்தில் வசிக்கும் உறவினர், நண்பர்கள் நடுவே இவையெல்லாம் தான் பாலங்கள். நாட்பட விட்டுவிட்டால் தூரம் எட்டாத் தூரமாகிப் போகும்.

//வந்த பின்பு எங்௧ளை பார்க்௧வோ வர மாட்டான்// நீங்கள் போனால் கூட பதிலுக்கு வருவது இல்லையா?

//எங்௧ளுக்கோ அல்லது அவனுக்கோ எந்த பிரச்சனையும் இதுவரை இருந்தது இல்லை// சிலர் இப்படித்தான். தாங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொள்வார்கள். நேரில் சொல்லாமல் தவிர்ப்பார்கள். //நாங்௧ள் போனாலும் சரி எங்௧ளை மதிப்பது இல்லை// நீங்கள் போகும் போது, "வர வேண்டாம்," என்று முகத்தில் சொல்லவில்லை. வாக்குவாதம் எதையும் ஆரம்பிக்கவில்லை. அவரது தவிர்த்தலைத் தான் நீங்கள், 'மதிப்பது இல்லை,' என்று எடுத்திருக்கிறீர்கள். மனதில் உள்ள எதையோ சொல்ல இயலாமல் தவிக்கிறார், அதனால் தவிர்க்கிறார். அதாவது... சொன்னால் நீங்கள் வருந்துவீர்கள் என்று தோன்றியிருக்கிறது. அல்லது தான் நினைத்தது சரியா தவறா என்பது நிச்சயம் தெரியாத குழப்பமாகக் கூட இருக்கலாம்.

//௧ணவர்க்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுப்பது இல்லை இதனால் நான் அவரை போ௧ வேண்டாம் என்று கூறுகிறேன்// உங்கள் எண்ணம் சரிதான். இப்போது நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள். இதற்கு மேல் உங்கள் கணவர் போவதானால் போகட்டும். விட்டுவிடுங்கள். தடுக்க வேண்டாம். பிரச்சினை வந்தால் அவர் சமாளித்துக் கொள்வார். உங்களை யாரும் இனிக் குறை சொல்ல இடமில்லை அல்லவா!

//எனது பெற்றோரின் மனதுக்கா௧ மட்டுமே போக நினைக்கிறாரே தவிர மனதிருப்தியுடன் போ௧ எண்ணவில்லை// 'பிரச்சினைகள் வேண்டாம்,' என்று நினைக்கும் மனிதராக இருக்கிறார். உங்களுக்காகக் கூட போக நினைக்கலாம். அதனால் வற்புறுத்த வேண்டாம். சில சமயம் இதுவே கூட நிலமையைச் சரியாக்க ஒரு வழியாக அமையலாம்.

நிச்சயம் ஒரு நாள் எல்லாம் சரிவரும். அது வரை பொறுமையாக இருங்கள். அதன் பின்பும் இதைப் பற்றி அவர்களிடமோ குடும்பத்தாரிடமோ பேச்சு எடுக்காமல் விட்டுவிடுவது நல்லது. உங்களுக்கு இருப்பது ஒரேயொரு சகோதரன், நீங்கள் அவர் மேல் பாசமாக இருக்கிறீர்கள் என்பது உண்மையானால்... நிச்சயம் சமாதனமாவதையே விரும்புவீர்கள். இம்முறை கடைசித் தடவை என்று எண்ணிக் கொண்டு, எதுவும் ஆகாதது போல ஒரு தடவை உங்கள் கணவோடும் குழந்தைகளோடும் போய் வாருங்கள். மாற்றங்கள் நல்லதாக இருக்கட்டும். என் வாழ்த்துக்கள்.

ஒரு வேளை நிலமையில் மாற்றமில்லை என்றால், மனம் வருந்த வேண்டாம். நீங்கள் உங்கள் கடமையில் தவறவில்லை என்கிற மனத் திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் பெற்றோருக்கும் கிடைக்கும். அந்த வரை லாபம்தான்; நட்டம் எதுவும் இல்லை. பிறகு அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடலாம். பிடித்த போது உங்களிடம் வருவார்கள். உங்கள் பெற்றோர் தங்களையறியாமலே பாலம் போட்டுக் கொடுப்பார்கள்.

அமைதியாக இருங்கள். உங்கள் மனதை வேறு பிடித்த வேலைகளில் திருப்புங்கள். யார் என்ன பேசினாலும் மனதில் எடுத்துக் கொள்ளாதீர்கள். யாரிடமும் உங்கள் சகோதரனை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள். சந்தோஷமாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

தினமும் நான் போன் செய்வேன் ஆனால் அழைப்பை ஏற்௧ மாட்டான்
நான் தான் போன் செய்வேன் ஒருபோதும் அண்ணன் போன் செய்வது இல்லை குழந்தையின் புகைபடத்தை தினமும் அனுப்புகிறேன் குறுஞ்செய்தியும் அனுப்புகிறேன் பதில் ஏதும் அனுப்ப மாட்டான்
சில சமயம் அண்ணன் போன் செய்வான் அப்போது குழந்தையிடமும் வெகுநேரம் பேசிக்கொள்வான்
திருமணநாள்,,பிறந்தநாள் வாழ்த்துக்௧ளை நான் அவர்௧ளுக்கு கூறுவேன் அவர்கள் எங்௧ளுக்கு வாழ்த்துக்௧ளை கூற மாட்டார்௧ள்
நீங்௧ள் சொல்வது போல் எனது ௧ணவர் பிரச்சனை வேண்டாம் என்று தான் நினைக்கிறார் அவன் நடந்து கொள்வதுபோல் என்னால் நடந்துகொள்ள முடியாது என்பார்

ML

மேலும் சில பதிவுகள்