தோப்பம்

தேதி: January 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் தோப்பம் என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோ அவர்களுக்கு நன்றிகள்.

 

பூரணத்திற்கு:
தேங்காய் - ஒன்று
பொட்டுக்கடலை மாவு - ஒரு கைப்பிடி
வெல்லம் - ஒரு கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
மேல் மாவிற்கு:
மைதா மாவு - ஒன்றரை கப்
இட்லி மாவு - கால் கப் (அ) அரிசி மாவு - கால் கப்
பேக்கிங் பவுடர் - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு


 

தேங்காயைப் பூந்துருவலாகத் துருவி எடுத்துக் கொள்ளவும்
வாணலியைச் சூடாக்கி, தேங்காய்த் துருவலைப் போட்டு, குறைவானத் தீயில் வைத்து அதிலுள்ள நீர் வற்றும் வரை வதக்கவும்.
அடுப்பின் தீயை குறைவாகவே வைத்து வதங்கிய தேங்காய் துருவலுடன் பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி இறக்கவும்.
சூடு ஆறும் முன்பே அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
மேல் மாவிற்கு தேவையான அனைத்தையும் சிறிது நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போடவும். உருண்டை வெந்து இளம் பழுப்பு நிறமானதும் எடுத்துவிடவும்.
இனிப்பான தோப்பம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தோப்பம் குறிப்பை வெளியிட்ட‌ குழுவுக்கு எனது நன்றிகள் பல‌. இனிப்பான‌ குறிப்பினை கொடுத்த‌ திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....