பீர்க்கங்காய் முட்டை கறி

தேதி: January 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பீர்க்கங்காய் - ஒன்று
முட்டை - 3
வெங்காயம் - ஒன்று (சிறியது)
தக்காளி - ஒன்று (சிறியது)
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் - சிறிது
முந்திரி - 7 (ஊற வைக்கவும்)
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிது
முட்டைக்கு:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி / மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


 

வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பீர்க்கங்காயைத் தோல் சீவி நடுத்தரமான அளவுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் பொரியவிட்டு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள முட்டையைச் சேர்த்து பக்குவமாக இரண்டு பக்கமும் திருப்பி பிரட்டி எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்கவும்.
பீர்க்கங்காய் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மூடிவிடவும்.
தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்துப் பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தூள் வாசம் போகக் கொதிக்கவிடவும்.
தேங்காயுடன் ஊற வைத்த முந்திரியைச் சேர்த்து நைசாக அரைத்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, ஒரு முறை கலந்துவிட்டு, வறுத்து வைத்துள்ள முட்டை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் முட்டை கறி தயார். சாதம், சப்பாத்தி, இட்லிக்கு நல்ல ஜோடி இது.

சாம்பார் தூளுக்கு பதிலாக பச்சை மிளகாயும் சேர்க்கலாம். நீர்க்க இருந்தால் பிடிக்குமானால் தேங்காய், முந்திரியை அரைத்து சேர்க்காமல் தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமா இருக்கு வனி. கலர்ஃபுல் போட்டோஸ்

Be simple be sample

சூப்பர் ரெசிப்பி. இந்த‌ காம்பினேஷன் இப்பத் தான் கேள்விப்படறேன். பீர்க்கங்காய் எல்லாம் எனக்கு கூகிள் இமேஜ்ல‌ தான் இந்த‌ நாட்டில‌ பார்த்துக்க‌ முடியும். ஊருக்கு வந்துட்டு தான் ட்ரை செய்யனும். கடைசி படம் அழகு. வாழ்த்துக்கள் வனி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வித்தியாசமா இருக்கு.முடிந்தால் செய்து பார்க்கிறேன்.

மிக்க நன்றி ரேவ்ஸ், சுமி & தர்ஷா... :) செய்து பார்த்து அவசியம் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா