:-) உங்கள் இதே கேள்விக்கு நேற்றுப் பதில் சொல்லியிருந்தேனே! என் பதிலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா! :-) ம்... நான் டாக்டர் இல்லைதான். ஆனால் நிச்சயம் சரி என்று தெரிந்ததை மட்டும்தான் சொல்லுவேன். இங்கு பதில் சொல்லும் மீதிப் பேர் கூட டாக்டர்கள் இல்லை. ஆனா நம்புறீங்க! ;-)
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதம். பாலூட்டும் சமயம் மாதவிலக்கு வராது என்பார்கள். சிலருக்கு பாலூட்டிக் கொண்டே இருக்க, பிரசவித்த இருபத்தோராம் நாள் முதல் ஒழுங்காக மாதாமாதம் சரியாக மாதவிலக்கு வந்துவிடும். சிலருக்கு இரண்டு மாதம் கழித்து வர ஆரம்பிக்கும். சிலருக்கு பாலூட்டுவதை நிறுத்தும் வரை வராது.
வராமலிருக்கும் சமயம் உடலுள் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள் தெரியாமல் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக் கொண்டால், பாலூட்டுவதால்தான் வரவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்க உள்ளே இன்னொரு ஜீவன் உங்களுக்குத் தெரியாமல் வளர ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உங்கள் குழந்தைகளை ஒழுங்காகக் கவனிப்பதில் சிரமம் வரும். குடும்பத்தார் எல்லோருக்கும் சிரமமாக இருக்கும்.
இதே கேள்விக்கு இன்னொரு தடவை தனி த்ரெட் போடாதீங்க. அடுத்த தடவை நீங்கள் போடும் கேள்விக்கு இமா பதில் சொல்லாமல் உங்களை நிம்மதியாக விட்டுவிடுவேன். பயமில்லாமல் எதுவானாலும் இந்த த்ரெட்லயே கேளுங்க. :-)
ஃபெமினா

- இமா க்றிஸ்