பருத்திப் பால்

தேதி: January 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ராதா ராணி அவர்களின் பருத்திப்பால் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ராதா ராணி அவர்களுக்கு நன்றிகள்.

 

பருத்தி விதை - 2 கைப்பிடி அளவு
கருப்பட்டி - 100 கிராம்
தேங்காய்ப் பால் - அரை மூடி
சுக்கு - பாதி விரல் அளவு
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2


 

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.
காலையில், ஊறிய விதையை எடுத்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும்.
கருப்பட்டியைத் தூளாக்கி, ஒரு கப் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்
ஓரு பாத்திரத்தில் பருத்தி விதைப் பாலை ஊற்றி காய்ச்சவும்.
ஒரு கொதி வந்ததும் கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் கருப்பட்டி மற்றும் தேங்காய்ப் பாலை ஊற்றி காய்ச்சவும்.
இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி, கரண்டியால் தொடர்ந்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கிவிடவும்.
கடைசியாக சுக்கு மற்றும் ஏலக்காயைப் பொடியாக்கி சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

பருத்தி விதையில் பால் எடுத்து 2 மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு மடங்காக ஆகும் வரை கொதிக்கவிடவும்.

தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க வைக்கக்கூடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதுவரை இப்படி ஒன்னு கேட்டது கூட இல்லை... எங்கே கிடைக்கும் இந்த விதை? ஹெல்தியானதுன்னு சொன்னீங்க, ட்ரை பண்ணிப்பார்க்கணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பருத்தி பால் பார்க்கவே நல்லாருக்கே வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பருத்திப் பால் பக்கவாதத்திற்க்கு நல்லதுன்னு என்னோட மாமியாருக்கு ஒனரை வருடத்திற்க்கும் முன் நான் இதை செய்து கொடுத்திருக்கிறேன். அறுசுவையிலிருந்து தான் இந்த ரெஸிப்பி உபயோகித்தேன்.
நீங்க படங்களோட காட்டியுள்லது இன்னும் பயனுள்ளது. அதிக வேலைப் பாடுதான், செய்முறை அழகாக காண்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

பருத்திபால் எனக்கு ரொம்ப‌ பிடிக்கும்.. நல்லா செய்திருக்க‌ ரேவ்.. பார்க்கவே அருமையா இருக்கு...

"எல்லாம் நன்மைக்கே"

இது மாடுகளுக்கு திவனமாக கொடுப்பார்கள். எல்லா பலசரக்கு கடைகளில் கிடைக்கும்.உடம்பு பலதிற்கு கொடுக்கப்படும்.பாட்டி காலத்தில் கிராமங்களில் செய்வார்கள். வேலை அதிகம்