தேதி: January 19, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. K. வசந்தகுமாரி அவர்களின் லவங்க லதிகா என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வசந்தகுமாரி அவர்களுக்கு நன்றிகள்.
மைதா மாவு - 50 கிராம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பால் - அரை கப்
சர்க்கரை - 100 கிராம்
தேங்காய் - கால் மூடி
ஏலக்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - கால் லிட்டர்
தண்ணீர் - தேவையான அளவு
மைதா மாவுடன் வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி வைக்கவும். ஏலக்காயைப் பொடிக்கவும்.

பாலைக் கொதிக்க வைத்து, அதில் தேங்காய்த் துருவல், ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கலந்து பூரணத்தைத் தயார் செய்து வைக்கவும்.

தயார் செய்த தேங்காய் பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி, அதில் ஏலக்காயைச் சேர்க்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறிய பூரி போல் தேய்த்து, நடுவில் பூரணத்தை வைக்கவும்.

பிறகு அதனை உருண்டையாக உருட்டவும். இதே போல் மீதமுள்ள மாவிலும் பூரண உருண்டையை வைத்து உருட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.

சுவையான லவங்க லதிகா ரெடி.

Comments
லவங்க லதிகா
பேர் ஸ்டைலா இருக்கு. அந்தக் கடைசிப் படம்... பார்க்க சுவையாகத் தெரிகிறது. ஒன்றே ஒன்று எடுத்துட்டு ஓடுறேன். :-)
- இமா க்றிஸ்
லவங்க லதிகா
ரேவா பெயர் வித்தியாசமா இருக்கு.. செய்திருக்கும் விதமும் நன்றாக உள்ளது. டேஸ்ட் சூப்பரா இருக்குன்னு நினைக்கிறேன்.. எனக்கும் ஒன்னு எடுத்துக் கொள்கிறேன்.. பெயர் வித்தியாசமா இருக்கு.. லவங்க லதிகான்னு பார்த்தவுடன் ஏதோ லவங்கம் சேர்த்து செய்கின்ற டிஸ் நினைச்சேன்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
லதிகா..
இன்றைய கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள்.பவர்ஸ்டார் படத்தோட பெயர் மாதிரி இருக்கேன்னு நினைசுட்டே வந்தேன் ரேவ்ஸ்...;) லக்க ல்க்க லவங்க லதிகா.... அருமை. கடைசி படம் அழகு. எல்லா குறிப்புமே சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேவ்ஸ்
சூப்பர் குறிப்புகள் எல்லாமே :) வாழ்த்துக்கள் ரேவ்ஸ்.
லவங் லதிகா வழக்கமா பூரனம் வெச்சு மாவை மடிச்சு சதுரமா மேலே லவங்கம் குத்தி வெச்சிருப்பாங்க... இது செய்முறை வித்தியாசமா இருக்கு. அவசியம் செய்துட்டு சொல்றேன் ரேவ்ஸ்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Revathi sis
இதோ வந்துட்டேடேடேன். எனக்கு ஒன்னு போதாது ஏற்கனவே ரெண்டுபேர் எடுத்துட்டாங்க. எனக்கு ஜோடியா பார்சல் பண்ணுங்க சிஸ். அழகா செய்து காட்டீருக்கீங்க. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
ரேவா
லவங்க லதிகா பேரே புதுசா இருக்கே கடைசி படம் பார்க்கவே சூப்பரா இருக்கு :) மீண்டும் மீண்டும் கிச்சன் குயின் பட்டம் சூப்பருங்கோ
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.