சில மாதங்கள் தொடாதிருந்த இவ்வலைப்பூவை, இன்று தொட்டிருக்கிறேன்; உங்களுக்கும் தொட்டுக்கொள்ளத் தருகிறேன். :-)
முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாண்டில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கட்டும்.
விடுமுறைக் காலம் பல வேலைகள் நிரம்பியதாக இருந்தாலும் விருந்தினர் வருகையும் விருந்துகளுக்கு அழைப்புமாகவே அதிகம் இருந்தது. வருட இறுதி மகிழ்ச்சியாகக் கழிந்தது. அதே விதமாக வருட ஆரம்பமும் இனிமையாக ஆரம்பித்திருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பாக நாங்கள் இங்கு வாடகைக்கு இருந்த வீட்டில் Tibouchina மரம் ஒன்று இருந்தது. சமையலறை ஜன்னல் எதிரே நின்ற அது, நாவல் நிறத்தில் பூத்துச் சொரியும். பூ ஒன்றேனும் இல்லாமல் இருந்த நாட்களே கிடையாது. ஒரு நாள் ஆராய்ச்சிக் குணத்தில், சிறிய கந்து ஒன்றைத் தொட்டியில் ஊன்றிவிட, அழகாக வளர ஆரம்பித்தது. இப்போது எனக்குச் சொந்தமான வீட்டில் வேலியோரம் பெரிய மரமாகப் பூத்துச் சொரிகிறது.
விடுமுறையில் போட்ட பூக்கோலம் மேலுள்ளது. சுற்றிலும் உள்ள இலைகள் - பிரிஞ்சி. இந்தியாவில் கிடைக்கும் பிரிஞ்சி போல அல்லாமல் சற்றுத் தடிமனாக; பளபளப்பாக; சாதாரண இலைகளில் உள்ளது போன்ற நரம்பு அமைப்புக் கொண்டதாக இருக்கிறது இங்கு வளரும் பிரிஞ்சி.
~~~~ xxx ~~~~
இங்கு மாக்கோலம் இட வழி இல்லாத காரணத்தால்தான் சுண்ணக் கோலம் போடுவேன். நத்தார்க் காலம், வாசலை அலங்கரிக்க அறுசுவையின் நத்தார்த் தாத்தா கோலம் போட்டிருந்தேன். இரண்டாவது கோலம் - என் கற்பனையில் உருவானது - இங்குள்ள படத்திலிருப்பது.
இங்கு, வருட இறுதியில் புஹுடுகாவா மரங்கள் சிவப்பாகப் பூத்துச் சொரியும். அதனாலே அது 'நியூஸிலாந்து க்றிஸ்மஸ் ட்ரீ' எனப்படுகிறது. அதன் பூக்களின் வடிவம், நத்தார்க் கால விற்பனைப் பொருட்களிலும் பரிசுப் பொதி சுற்றும் தாள்களிலும் தவறாமல் இடம்பெறும். இங்கு என் கோலத்தில் உள்ளவை....
1. புஹுடுகாவா பூக்கள் & இலைகள்
2. கொறு எனப்படும் பன்னக் குருத்து வடிவம்
3. மஓறி மக்களின் முடிவிலி அடையாளம்.
~~~~ xxx ~~~~
இரண்டு படங்கள் தேற்றியாகி விட்டது. மூன்றாவதற்கு என்ன செய்யலாம்!! சிந்தனை செய்.. மனமே!! :-)
இந்த வருடம் செய்த பாலன் பிறப்பு அலங்காரத்தைப் பற்றிச் சொல்லலாமா!
2013 - ஒரு கூடையுள் மரச் சீவல் பரப்பி பாலன் பிறப்பைக் காட்டியிருந்தேன். 2015 - 'எப்படி அலங்கரிக்கலாம்!' என்று சிந்தித்துக்கொண்டே எங்கள் குட்டித் தேநீர் மேசையின் அலங்காரத்தை மாற்ற ஆரம்பித்தேன். அதனுள்... அவ்வப்போது காலத்திற்குப் பொருத்தமான, அல்லது என் மன ஓட்டத்திற்குப் பொருத்தமான அலங்காரம் மாறி அமர்ந்திருக்கும்.
ஆங்காங்கே பனி படர்ந்த கிராமம் ஒன்றைத் தோற்றுவிப்பது எனது நத்தார்க் கால வழக்கம். சின்னச் சின்னக் கடைகள், மரங்கள், புகையிரத இயந்திரப் பெட்டி, பனிமனிதப் பாடகர் குழு & அவர்களைப் பாடுவிக்கும் குட்டிக் கரடியார், தபாற்பெட்டி இப்படிப் பலதும் வைக்கப்படும்.
அன்று தற்செயலாக சூசையப்பர், மூவிராச்சாக்கள், இடையன் எல்லோரும் மேசைக்கு அடங்கும் உயரத்தில் இருப்பது கவனத்திற்கு வர, பாலன் பிறப்பும் பனிக் கிராமத்தின் பகுதியாகிற்று.
நாளை எல்லாம் பிரிக்கப்பட்டுவிடும். அதன் முன் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இன்னொரு சமயம் அலங்கரிக்கும் போது... இதே காலமானாலும் இதே அலங்காரம் இராது; ஒழுங்கு புதிதாக இருக்கும். அதுவும் உங்கள் பார்வைக்கு வரலாம். :-)
Comments
தொட்டவை
உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இமாம்மா, தொட்டால் துலங்கும்னு கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள் தொட்டவைகள் அனைத்தும் அழகுற மிளிர்கின்றன.....
உங்கள் பூக்கோலம், 2 ஆவது தீம் கோலம் மற்றும் 3 ஆவது பாலன் பிறப்பு அலங்காரம் அனைத்தும் அழகு...அசத்தல்...அருமை.....
ஒரே ஒரு சந்தேகம், நத்தார்க்காலம் என்றால் குளிர்காலமா? கிறிஸ்மஸ் காலமா?
இமாம்மா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா..
உங்கள் மூன்று படங்களும் அருமை.. சொல்லியிருக்கும் விதமோ அருமையோ அருமை. உங்கள் தமிழ் சிலது எனக்கு புரியாது. வித்தியசமாக இருக்கும் எனக்கு அந்த எழுத்து நடையும் ரொம்ப பிடிக்கும். நீங்கள் எதையெடுத்து செய்தாலும் அது ஒரு உருவம் பெறும். உங்கள் கலைதிறனும் எப்படிதான் எதை செய்தாலும் தனி அழகு. சூப்பரா இருக்குமா. வாழ்த்துகள்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
இமா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) உங்க லீவ் புதுவருட பிறப்போடு முடிஞ்சுது, எங்களுக்கு இப்ப தான் பொங்கலோட முடிஞ்சிருக்கு. நீண்ட இடைவெளிக்கு பின் அழகான வேலைகளின் படங்களோடு வந்திருக்கீங்க, சூப்பர் இமா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நத்தார் பற்றி
//நத்தார்க்காலம் என்றால் குளிர்காலமா? கிறிஸ்மஸ் காலமா?// கிறிஸ்மஸ் அனு. :-)
இந்தியத் தமிழில் மற்றைய இந்திய மொழிச் சொற்களின் கலப்பு இருப்பது போல... இலங்கையில் நத்தார்.
இது சிங்களச் சொல் அல்ல, போர்த்துகேயச் சொல். (கோவா பக்கம் பயன்படுத்தக் கூடும்.) இலங்கையை ஆண்ட போர்த்துக்கேயர், கிறிஸ்தவ மதத்தைப் பரப்பிய சமயம் அவர்கள் வழியாகச் சிங்களத்திலும் தமிழிலும் நுழைந்துகொண்ட பல சொற்களுள் இது முக்கியமானது. அடிப்படைச் சொல்... natal - பிறப்பு. நேடிவ் என்கிற சொல் இந்த நேட்டல் என்னும் அடிப்படைச் சொல்லிருந்து வந்ததுதான்.
இங்கு... நேட்டல்.... கிறிஸ்து பிறப்பைக் குறிக்கிறது. போர்த்துகேய மொழியில் நத்தல்; சிங்களத்திலும் அதே உச்சரிப்புத்தான் නත්තල්. இலங்கைத் தமிழில் அது 'நத்தார்' என்று உரு மாறி இருக்கிறது. நேரம் கிடைத்தால் நத்தார் என்று தட்டி, கூகுள் இமேஜஸ் பாருங்கள்.
- இமா க்றிஸ்
ரேவதி
//உங்கள் தமிழ் சிலது எனக்கு புரியாது. வித்தியசமாக இருக்கும்// :-) எந்த வரி? கேட்டுருங்க. தப்பா கெஸ் பண்ணிட்டு இருக்கிறதை விட கேட்டுத் தெளிவது மேல். :-)
- இமா க்றிஸ்
வனி...
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
//உங்க லீவ் புதுவருட பிறப்போடு முடிஞ்சுது,// முடியல. பொங்கலுக்கு முதல் நாள் வரை கொண்டாட்டம்தான். :-) வரும் 27 தான் மீண்டும் பாடசாலை ஆரம்பம். அதற்குள் முடித்துவிட நீளமாக ஒரு லிஸ்ட் இருக்கு. :-)
//நீண்ட இடைவெளிக்கு பின் அழகான வேலைகளின் படங்களோடு வந்திருக்கீங்க,// நன்றி வனி. :-)
- இமா க்றிஸ்
மூவிராச்சாக்கள்
இந்த விளக்கம் எனக்கும்தான். நன்றி. எனக்கு இன்னொரு doubt-ம் இருக்கு. "மூவிராச்சாக்கள்"-க்கும் விளக்கம் தேவை.
பின்குறிப்பு: உங்களிடம் இன்னும் ஒரு சந்தேகம் எங்கோ கார்த்திகைப் பூச்சி பற்றி
கேட்டிருந்தேன்.
அன்புடன்
ஜெயா
நத்தார்
நன்றாக விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்! நன்றி இமாம்மா.
//ஆங்காங்கே பனி படர்ந்த கிராமம் ஒன்றைத் தோற்றுவிப்பது எனது நத்தார்க் கால வழக்கம்// பனி படர்ந்த கிராமம்னு சொல்லியிருந்ததால குளிர்காலமோன்னு ஒரு சந்தேகம் வந்தது!
கூகுள் இமேஜஸ்லயும் பார்த்தாச்சு! அனைத்தும் கிறிஸ்து பிறப்பின் படங்களே!
நத்தாரும் பனியும்
கிறிஸ்து பிறப்பு மார்கழியில் என்பது நிச்சயமில்லாத விடயம். அவர் பிறந்த பெத்லஹெம் பாலைவனப் பூமி. கிறிஸ்து மரணத்தின் பின்பே கிறிஸ்தவம் மக்கள் மத்தியில் பரவியது. ஐரோப்பியரால், அதுவும் அவர்களது மார்கழியில் (பனிக்காலம்) நத்தார் கொண்டாடப்பட்டதால், வாழ்த்திதழ்களின் படங்களில் பனி இடம்பெற, அது அழகாக இருக்க... அப்படியே அந்த உண்மை!! ;) மக்கள் மனதில் பதிந்து போயிற்று. :-)
பனி கொட்டும் பிரதேசத்தில் மேரியும் சூசையும் ஒரு மந்தைக் கொட்டிலில்!! அவர் 'இறைவன்' என்கிற கருத்தில் நிகழ்திருக்கலாம் என்று கொண்டாலும்... கிறிஸ்து பாலனைத் தேடி இடையர் போனதாக பைபிள் கதையில் வருவது, பனி இருந்திருக்க முடியாது என்பதைச் சொல்கிறது. இங்கெல்லாம் குளிர்காலத்தில் மந்தை வளர்ப்பில் மாற்றங்கள் வரும். பனியினால் கால்நடைகள் இறப்பதைத் தவிர்ப்பதற்காக வேறு இடம் அழைத்துப் போவார்கள். இந்தக் காலம் மீண்டும் சினைப்படுத்தும் காலமாக அமையும்.
நத்தார் வாழ்த்திதழ்களில் ஒட்டகங்கள் கூட இருக்கும். :-) அது பாலைவனப் பிராணி; பனியைப் பொறுத்திராது. பனி சும்மா... ஒரு சுவாரசியத்திற்காக மட்டும். :-)
- இமா க்றிஸ்
மூவிராசாக்கள்
உங்கள் வின்சன்ட் என்னும் பெயருக்கும் இந்தச் சந்தேகத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறதே ஜெயா! :-) (ஜெயா என்கிற பெயருக்கும் ஒரு கருத்து உண்டு தெரியுமா!! ;) ஏப்ரல் மாதம் வ்ரட்டும், சொல்கிறேன்.)
மூவிசாக்கள்ல் - பதில் கொஞ்சம் நீளமாக இருக்கும். இப்போது நேரம் இல்லை. நிச்சயம் இன்றிரவுக்குள் பதிவேற்றி விடுகிறேன். கார்த்திகைப் பூச்சி... கிட்டத்தட்ட மறந்தே போனேன். ;(( மன்னிக்க வேண்டும். நினைவூட்டியதற்கு நன்றி. விரைவில் இரண்டிற்கும் பதில் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
இமா
புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
பூக்கோலம் மிக அழகு.
சுண்ணக் கோலம் வரைபடம் போன்றுள்ளது.
டீ டேபிள் அலங்காரம் காலத்திற்க்கேற்ற கிரியேட்டிவிட்டி! வாழ்த்துக்கள் இமா.
மூவிராச்சாக்கள் யாரோ?? (பாலனுக்கு பரிசு கொண்டு வந்தவர்களா?)
(பி.கு)
கிறிஸ்து பிறந்தது மார்கழியில் (டிசம்பரில்) இல்லை என்பது சரியே.
மூவிராசாக்கள் & கார்த்திகைப் பூச்சி
//விரைவில் இரண்டிற்கும் பதில் கிடைக்கும்.// பொறுமையுடனும், ஆவலுடனும் காத்திருக்கிறேன்.
அன்புடன்
ஜெயா
இமா, ஜெயா
இமா, முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
முதலாவது, மலர் அலங்காரம் அழகு. நடுவில் உள்ள மலர் ரொம்பவே பொருத்தம். பூக்களை தண்ணீரில் வைக்கலியா? அப்போ சீக்கிரம் வாடிப் போவாங்களே......
ரெண்டாவது, கோலம் அருமை. அதைப் பார்த்ததும் எனக்கு மதுபானி பெயிண்டிங் நினைவுக்கு வருது. இடைவெளியின்றி நெருக்கமா வரையணும்.
மூணாவது, சரஸ்வதி பூஜைக்கு கொலு அலங்காரம் மாதிரி..........))))
(கொஞ்சம் குளேசப்பில் படம் எடுத்திருக்கலாம்).
பன்னங்குருத்து எண்டால் பனைமரத்தின் குருத்தா?
முடிவிலி அடையாளம் எண்டால் என்ன?
ஜெயா, நானும் கார்த்திகைப் பூச்சி பறப்பதைக் காண காத்திருக்கேன் உங்களோடு:))))
இமா ஜூட்
;)) ஆஹா! ஒரு ரெஸிபி தேடிட்டு வந்து இங்க பராக்குப் பார்த்ததுல... 9 மணி ஆச்சு. சாரி. இன்று கடை மூடியாச்சு. ;) நாளை காலை மறக்காம வரேன்... குறிச்சு வைச்சாச்சு நோட்ல. :-)
இமாவை நம்பினோர் கைவிடப் "படார்!!" ;))
- இமா க்றிஸ்
waw supper good creativity,,
waw supper good creativity,,
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
இமாம்மா
அழகோ அழகு மூன்றுமே அழகு தான் எனக்கு பூ அலங்காரம் மிகவும் பிடித்துள்ளது பார்க்க பார்க்க மனதுக்கு இதமாக உ ள்ளது நன்றி தொடர வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
நிகிலாவுக்கு
//பூக்களை தண்ணீரில் வைக்கலியா? அப்போ சீக்கிரம் வாடிப் போவாங்களே......// தண்ணீர்லதானே மிதக்குது! :-) ஃபோட்டோ இங்க டௌன்லோட் ஆக மாட்டேன்னுட்டுது. பிறகு பாரம் குறைச்சு ஏத்தினதுல டீடெய்ல்ஸ் மிஸ்ஸிங். சாதாரணமா 1 நாள்ல வாடிருற செவ்வரத்தை, இதுல 2 முழுநாள் இருந்துது.
//இடைவெளியின்றி நெருக்கமா வரையணும்.// ம்.. அடுத்த தடவை பண்ணிருறேன். ஆனால்... இருக்கிற புள்ளி எல்லாம் முடிஞ்சு போச்சே!
//கொஞ்சம் குளேசப்பில் படம் எடுத்திருக்கலாம்// ;-) அது இருக்கு விதம் விதமா. அதைப் போட்டா அது ஒரு காட்சி மட்டும்தான். இப்படிப் போட்டாத்தானே டீ டேபிள் உள்ள அது செட் பண்ணி இருக்கிறதை முழுசாக் காட்ட முடியும்!!
//பன்னங்குருத்து எண்டால் பனைமரத்தின் குருத்தா?// இல்லை. பன்னத்தாவரம்.. fern fond. பனங்குருத்து - palm fond பனை இங்கே கிடையாது.
//முடிவிலி அடையாளம்// infinity symbol சாதாரணமாக இரண்டு வளைவுகள் இருக்கும்/ மஓறி சிம்பலில் 3 இருக்கும்.
- இமா க்றிஸ்
ரேணுகா
//பார்க்க பார்க்க மனதுக்கு இதமாக உ ள்ளது// ஆமாம், உள்வீட்டில் இப்படி நாலு பூக்களைப் போட்டு வைத்தால் கூட பார்க்க இதமாக இருக்கிறது.
//தொடர வாழ்த்துகள்// அவ்வ்! ;)) தொடரணுமா!!
- இமா க்றிஸ்
கேயப்பிரியா
//விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..// ஆமாம், ஒவ்வொரு நிலையையும் கடந்து போய்த் திரும்பிப் பார்த்தால்!! இவ்வளவுதானா! இதற்குத்தான் இத்தனை ஆரவாரம் செய்தேனாவென்றும் இருக்கும். :-)
ம்... தமிழ்ல டைப் பண்ண ஏலாதா ப்ரியா! இங்க தட்டினால் தன்னாலயே வருமே!
- இமா க்றிஸ்
வாணி செல்வினுக்கு
//சுண்ணக் கோலம் வரைபடம் போன்றுள்ளது.// ஹி ஹி.. ;)) நான், 'பழங்காலக் கரும்பலகையைப் போல இருக்கு,' என்று நினைத்துக் கொண்டே தான் வரைந்தேன் வாணி. :-)
அது... இன்னும் ஒன்றிரண்டு செட்டப் வைத்திருக்கிறேன். இப்போ எம்ப்டி சால்னா, எம்ப்டி பிரியாணி மாதிரி எம்ப்டி டீ டேபிள். ;)
அமாம், அந்த மூவரேதான். :-)
முன்னால ஒரு கமண்ட்ல என்னவோ தப்புத் தப்பாக டைப் பண்ணி இருக்கிறேன். ;)) என்னைத் தவிர யாருக்குமே தப்புகள் கண்ணில் படாதோ!!
//கிறிஸ்து பிறந்தது மார்கழியில் (டிசம்பரில்) இல்லை என்பது சரியே.// நன்றி வாணி.
- இமா க்றிஸ்
ஜெயா
பொறுத்தார் பூமி ஆள்வார். ;))
- இமா க்றிஸ்
எல்லோரும் ஓடி வாங்கோ
\\முன்னால ஒரு கமண்ட்ல என்னவோ தப்புத் தப்பாக டைப் பண்ணி இருக்கிறேன். ;)) என்னைத் தவிர யாருக்குமே தப்புகள் கண்ணில் படாதோ!!//
இப்போ கண்டு பிடிச்சிட்டேனே, எல்லோரும் ஓடி வாங்கப்பா தமிழை நாம தப்பு தப்பா டைப் பண்ணினா நம்ம காதை திருகி (?) நமது கையிலே கொடுத்திடும் இமா "வே" (!!!!!!!!!!!) ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணியிருக்காங்க . ஜெயாவுக்கு கொடுத்த பதிலில், சீக்கிரம் பாருங்கோ ...
வனி ஓடி வாங்க ..
இமாவை பென்ச் மேல ஏத்தலாமா ? இல்ல கொம்பு பொம்மை கொடுக்கலாமா ?
அட்மின் அண்னா குச்சி ரெடியா ??
இமா அவங்களா வந்து மாட்டியிருக்காங்களே :)
vani sikitingalae
அண்னா :( imma varaanga
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி, வாணி, அண்..னா
;))))))) நானே சொன்னதால கண்டுபுடிக்காதவங்களுக்கு மட்டுமே பனிஷ்மண்ட். ;)
//கொம்பு பொம்மை// அது என்னது!! எங்கேயோ என்னமோ மிஸ் பண்ணிருக்கேன். இதுக்குத்தான் ஒழுங்கா டெய்..லி அறுசுவைக்கு வரணும் என்கிறது. :-)
- இமா க்றிஸ்
மனதை தொட்டன
பூக்களின் அடுக்கு மனதை தொட்டன. பூக்களே சற்று நில்லுங்கள்... இந்த பாடல் மனதில் தோன்றியது முதல் படத்தை பார்த்தவுடனே.
அமர்ந்திருக்கும் மலர்களை நிற்கச்சொன்னால் கோபிக்குமோ என்னமோ?:)
மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், ஒரு சிறு பூவினை ஒவ்வொரு இதழாக உற்று ரசித்தாலே, மனது புத்துணர்வு அடையும்.
இமா நீங்கள் இதில் அடுக்கியிருக்கும் மலர்களுக்கு வாசனை இருக்காது தானே. அதாவது மல்லிகை, முல்லை, ரோஜா, செவ்வந்தி...இன்னும் பிற போன்று மனதை மயக்கும் வாசனையை சொல்கிறேன்.
ஆனால் கண்களை கொள்ளை கொள்ளும் அழகு.
நடுவில் இருப்பது செம்பருத்திதானே, ரோஜா வண்ணத்தில் இருப்பவை அரளி, நீலவண்ணம் என்ன பூ?
கரும்பலகை கோலம் அழகு, கடைசி படம் மிகவும் அழகு.
//அமாம்// இமாமா இது ஹமாமா? :))) என் கண்ணுக்கு தட்டுப்பட்டதை சொன்னேன்.
வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.
என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ
imma
டீச்சரம்மா... நான் இப்பவெல்லாம் யாரையும் பென்ச்ல ஏத்துறதே இல்லை. ரொம்ப நல்ல பிள்ளைகள் எல்லாரும் அப்படின்னு நம்ப ஆரம்பிச்சுட்டேன்.
கொம்பு பொம்மை... 3:) இதை முகபுத்தகத்தில் தட்டினா வருமே... அது தான்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹமாம் சிவிஸ்ரீ
//இதில் அடுக்கியிருக்கும் மலர்களுக்கு வாசனை இருக்காது தானே.// இல்லை. இமா... வாசமில்லா மலர். ;) அந்த இலைக்கு மட்டும் வாசம் இருக்கிறது.
//நீலவண்ணம் என்ன பூ? // Tibouchina
//இது ஹமாமா? :))) // ஹையா! இன்றும் மூவிராசாக்களுக்கும் கார்த்திகைப் பூச்சிகளுக்கும் விடுதலைதான். ;)) போஸ்ட் தட்ட ஆரம்பிச்சாச்சு. ஒரு வேலைக்காக அதிகாலை எழுந்தேன். இப்போ கண்ணைச் சுழற்றுகிறது. விரல்கள் அழுத்தமாக விழ மாட்டேன் என்கிறது. காம்பினேஷன்ல வரும் எழுத்தெல்லாம் பாதிதான் வருது. ;) அதை விட்டு தூக்கத்தைக் கலைக்க இங்கு வந்தால்... ஹமாம்! ;))) ஆ..மாம், இனித் தட்டவே கூடாது இமா. ;) நல்லிரவு அறுசுவை. ;(
- இமா க்றிஸ்
3:)
அது க்ரவ்ன் வைச்ச கிச்சன் க்வீன் போல இல்லையா இருக்கு!! ;)
- இமா க்றிஸ்
இமா
அப்படியும் சொல்லலாம்... நம்ம குயினெல்லாம் கிச்சனில் கொம்பு வெச்ச பொம்மை தான் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அன்பு இமா
//இமாவை நம்பினோர் கைவிடப் "படார்!!" ;)) //
நான் காத்திருக்கிறேன். மறந்துவிடாதீர்.
அன்புடன்
ஜெயா