ஒரு நம்பிக்கை குடுங்களேன் தோழிகளே,,,

வாழ்க்கை என்பது ஒரு வரம்.குழந்தை என்பது ஒரு தவம்.இந்த தவம் ஒரு சிலர்க்கு உடனயே கிடைத்து விடுகிறது.ஆனால் சிலருக்கு அந்த தவம் நீண்டு செல்கிறது,இதன் போது அனுபவிக்கும் வேதனை,ஏமாற்றம்,கேலி,கொஞ்சமில்லை,அப்பிடி கஸ்ரபட்டு வெற்றி அடைந்தவர்கள் இருந்தால் உங்கள் அனுபவங்கள் சிகிச்சைகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்,அனுபவித்தவர்களுக்கு தன் வலியும் வேதனயும் புரியும் என்பாங்க இதனால் பலருக்கு நம்பிக்கை ஏற்படும்,குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் வேதனையில் இருப்பவர்களுக்கு ஒரு ஆறுதல்,ஒரு நம்பிக்கை குடுங்களேன் தோழிகளே,

என் தோழிக்கு 7 வருடமாக குழநதை இலலை பார்க்காத doctor இலலை .. avaluku endometriousis ..thinamum varunthuvaal ..kanavanudaiya support illai ...iui ivf மற்றும் வாடகை தாய் varai சென்றனர் .. அவள் பெற்றோர் தான் எல்லாத்துக்கும் செலவு செய்தார்கள் ..கணவனோ கணவன் பெற்றோரோ குறை மட்டுமே சொல்ல வாய் திறந்தனர் .... அவல் இயற்கையாகவே oru azhakana aan kuzhanthaiku தாயானால் atharku kaaranam அவல் தன உணவு முறையை மாற்றி amaithathu thaan ...தோழிகளே ஊட்ட சத்துணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். கடவுளை நம்புங்கள் குழந்தை இல்லோர் என்ற பேச்சுகே இடமில்லை ..

இதை தான் எதிர்பார்த்தேன் ரொம்ப நன்றி தோழி

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

//அப்பிடி கஸ்ரபட்டு வெற்றி அடைந்தவர்கள் // நிறையப் பேர் இருப்பாங்க. //அனுபவித்தவர்களுக்கு தன் வலியும் வேதனயும் புரியும் என்பாங்க// இல்லைங்க. இங்கே பதிவாகும் பல இடுகைகளும் படிக்கிற எல்லோருக்குமே எழுதுபவரின் கஷ்டத்தைப் புரிய வைச்சுட்டுத்தான் இருக்கு. தைரியமும் ஆறுதலும் சொல்றதைத் தவிர வேறு எதுவும் மற்றவர்களால் செய்ய இயலாது. அவரவர்தான் நிலமையைத் தைரியமா ஃபேஸ் பண்ண்ணும்.

மற்றவங்க வந்து நீங்க எதிர்பார்த்த பதிலைச் சொல்வாங்க. இமா இன்னொரு பக்கம் பார்த்து, என் அபிப்பிராயத்தைச் சொல்லிட்டுப் போறேன். :-)

//இதன் போது அனுபவிக்கும் வேதனை, ஏமாற்றம், கேலி, கொஞ்சமில்லை,// கேலி செய்ய யாருக்கும் உரிமை இல்லை கண்ணா. தெருமுனை வளைவில் என்ன காத்திருக்கு என்று பயணிக்கும் யாருக்கும் தெரிவதில்லை. இன்று இன்னொருவருக்கு ஆவது நாளை எம் குழந்தைகளுக்கும் ஆகலாம் என்கிற சிந்தனை இல்லாமல் சொல்பவர்கள் பேச்சையெல்லாம் எதற்காகக் காதில் போட்டுக் கொள்ள வேண்டும்? தாமதமாகும் சமயம் சிகிச்சைக்கும் போக வேண்டும்... சுய விருப்பதோடும் மனத் தைரியத்தோடும் நம்பிக்கையோடும்; மற்றவர்களுக்காக அல்ல.

சந்தோஷம் என்கிற உணர்வு... இன்னொருவர் எமக்குப் பிடித்த காரியங்களைச் செய்யும்போதெல்லாம் வந்துவிடுவது இல்லை அல்லவா? எமது மனநிலை அந்தச் சமயம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் வருகிறது. துக்கம் மட்டும் மனநிலை அதிக சந்தோஷத்தில் இருந்தாலும் மைனஸுக்குக் கொண்டு போய் விடுகிறது. நாம்தான் இடம் கொடுக்கிறோம்.

இன்னொருவர் ஏதையாவது சொல்ல, அந்தச் சமயம் நாம் சோகமாக ரியாக்ட் பண்ணினால்... முன்னால் இருப்பவர் காரியம் சித்தி. அதையே அவர் முகத்திலேயே திருப்பி அடிப்பது போல ரியாக்ட் பண்ணிப் பாருங்கள். 'உங்கள் வார்த்தை என்னை எதுவும் செய்யாது,' என்பது போல சிரித்த முகத்தோடு தொடர்ந்து பாருங்கள். வேலை ஆகவில்லை என்றால் திரும்ப அதே ரீதியில் பேச மாட்டார்கள். கவலை இருக்கும். அது உள்ளே இருக்கட்டும். காட்டிக் கொள்ள வேண்டாம். உங்களை நோகடிப்பவர்களால் உங்களுக்கு நன்மை எதுவும் இல்லை என்னும் பொழுது அவர்களைப் பொருட்படுத்தாமல் விடுவது தான் நல்லது.

ஃபேஸ்புக்ல எங்கயோ படிச்சேன், 'காகம் தலைக்கு மேல பறந்து போனா பரவாயில்லை; தலைல கூடு கட்டாம பார்த்துக்கணும்,' என்பது போல வரும் அந்த வாசகம். கவலை அதிக நேரம் தங்காமல் சிந்தனையை மாற்றப் பாருங்க. விரைவில் நல்லது நடக்கும்.

```` `````
கேள்வி தட்டும் போது ரொம்ப ஃபீல் பண்ணி தட்டி இருக்கீங்கன்னு புரியுது. ஸ்பேஸ் வர வேண்டிய இடங்கள்ல எக்ஸ்ட்ரா கமா வந்து இருக்கு. :-) இழைத் தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் சொல்றேன்னு நினைக்காம அதை எடிட் பண்ணி விடுங்க. காரணத்தோடதான் சொல்றேன். நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

நன்றி சகோதரி.நான்நான் வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்ச்னையை மட்டுமே பார்க்கிறேன் அதனால் என்னால் நீங்கள் சொல்வது போல இருக்க முடியவில்லை முயற்சி செய்கிறேன் முடிந்தவரை அந்த கமாவை அழித்துட்டு தான் பதில் அடிக்கிறேன்.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

புரியுது. இப்போதைக்கு... ஒவ்வொரு நாளையும் அந்தந்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி எடுத்துட்டுப் போங்க.

என் பிரார்த்தனைகள் உங்களோடு இருக்கும்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

Enaku 6 year kulandai illamal erunthen kulandai illai malati mamiyardaiu kanavardaiu niraiya vethanai anupavijten 3tadave iui vajjurgen 2time iui vaikkum pothu success agi 2 monthle baby heart beat illama poituju aposion pannitanga edukna karanam tappana treatment enaku enna proplem docter sollale andha docter 2year treatment eduthen enga amma veedle selav senjanga epti 2 lakhs selavu senjutanga tirumpa vera docter treatment eduthen avar enaku pcos proplem erugu sonnaru 6 month treatment eduthen iraivan udhaviyal normala consive ayiten eppa na 6month pregnant

நல்லது சகோதரி,,வாழ்த்துக்கள்,,நீங்க பட்ட கஸ்ரத்துக்கு இப்போ பலன் கிடைத்து விட்டது,,,நீங்க உங்க குழந்தையுடன் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

நன்றி imma அக்கா.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

food ennana eduthukrathu konjam sollunga sis..nanum kuzhanthaikaga wait pandren..non veg sapdakudatha..last 10 days la enna enna sapda koodathu

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், பப்பாபழம்,அன்னாசி,panadol,cococla,எள்ளு உணவுக்ள் தவிர்க்க வேண்டும்.பழங்கள் கீரைகள் மரக்கறிகள் பால் என்பன சாப்பிட வேண்டும்

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

மேலும் சில பதிவுகள்