ராஜ்மா ரொட்டி

தேதி: January 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. புவனேஸ்வரி அவர்களின் ராஜ்மா ரொட்டி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய புவனேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா - 2 கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
ராஜ்மா - ஒரு கப்
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - ஒன்று
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சில்லி கார்லிக் சாஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் ராஜ்மாவை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பத்து மணிநேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் ஊறிய ராஜ்மாவுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்த ராஜ்மா ஆறியதும் கைகளாலேயே ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.
மைதா மாவுடன் உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
வெங்காயம், பூண்டு வதங்கியதும் மசித்த ராஜ்மா, சாஸ் மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
மாவை சிறிது சிறிதாக எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து அதனுள் ராஜ்மா பூரணத்தை வைத்து சோமாஸ் போல அரை வட்டமாக மடிக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு ரொட்டியாக போட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான ராஜ்மா ரொட்டி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராஜ்மா அப்படினா என்ன‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ராஜ்மா ரொட்டி இப்பவே சாப்பிடனும்னு தோனுது அருமையா செய்து காட்டியிருக்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ராஜ்மா வேக‌ எத்தனை விசில் வைக்கனும்? please சொல்லுஙகள்

நிஷா