இலங்கை கடலை வடை

தேதி: January 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. துஷ்யந்தி அவர்கள் வழங்கியுள்ள இலங்கை கடலை வடை என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

கடலைப் பருப்பு - ஒரு சுண்டு
பெருஞ்சீரகம் - 1 - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
நசுக்கிய உள்ளி (பூண்டு) - 2 பற்கள்
நசுக்கிய இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு, அதில் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை ஊற்றி, 1 - 2 மணி நேரம் ஊறவிடவும் (கடலைப் பருப்பைவிட தண்ணீர் கூடுதலாக இருக்க வேண்டும்).
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறியதும் கடலைப்பருப்பை தண்ணீரில்லாமல் வடித்து பேப்பரில் போட்டு 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு கடலைப்பருப்பை மூன்றாகப் பிரித்து மூன்று பாத்திரங்களில் தனித்தனியாக எடுத்து வைக்கவும். (முதலாவதில் குறைவான அளவாகவும், மற்ற இரண்டிலும் முதலாவதின் இரு மடங்காவும் இருக்கும்படி அளந்து எடுக்கவும்).
முதலாவது பாத்திரத்தில் இருப்பதை தனியாக எடுத்து வைத்து விடவும்.
இரண்டாவது பாத்திரத்திலுள்ள கடலைப்பருப்பைக் கொரகொரப்பாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
மூன்றாவது பாத்திரத்தில் இருக்கும் கடலைப்பருப்பை நன்றாக அரைக்கவும். அரைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எல்லா கடலைப் பருப்பையும் போட்டு, அதனுடன் நசுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு சேர்க்கவும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும், அதில் கலந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு தீயைக் குறைத்து வைத்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (தீயைக் குறைத்து வைத்துப் பொரித்தால் வடையின் உள்ளே நன்றாக வேகும்).
சுவையான இலங்கை கடலை வடை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிபி சோ கிரிஸ்பி அன்ட் கலர்புல்..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெற்ற தர்ஷாவுக்கு வாழ்த்துக்கள் :) க்ரிஸ்பி வடை சூப்பர்ர்ர்ர்ர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தர்ஷா, எல்லா குறிப்பும் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த கடலை வடை ரொம்ப கிரிஸ்பியா, அழகா இருக்கு. வாழ்த்துகள் கிச்சன் குயின்

அன்புடன்
பாரதி வெங்கட்

ரொம்ப நன்றி ..

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சுவா..

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பாரதி..