கோதுமை புட்டு

தேதி: January 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுவர்ணா விஜயகுமார் அவர்கள் வழங்கியுள்ள கோதுமை புட்டு குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுவர்ணா அவர்களுக்கு நன்றிகள்.

 

கோதுமை - ஒரு கப்
சீனி - அரை கப்
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - 50 கிராம்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கோதுமையை நன்றாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த கோதுமையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கோதுமையுடன் லேசாகத் தண்ணீர் தெளித்து பிசையவும்.
அத்துடன் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல், உப்பு சேர்த்து புட்டு குழாயிலிட்டு 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
நல்ல மணமும் சுவையும் நிறைந்த கோதுமை புட்டு தயார். இது ஒரு சத்தான சிற்றுண்டி.

விரும்பினால் சூடாக இருக்கும் போதே ஏலக்காய் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிடலாம். புட்டு குழல் இல்லாதவர்கள் இட்லி தட்டிலும் வேக வைக்கலாம்.

கோதுமையை வறுத்துப் பொடி செய்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். தேவையானபோது எடுத்து இந்தப் புட்டினைத் தயார் செய்து கொள்ளலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோதுமை புட்டு சூப்பர்ங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். புட்டு வெகு ஜோர். எல்லாக் குறீப்பும் சூப்பர். படங்கள் வழக்கம் போல‌ பளிச். வாழ்த்துக்கள்.
இப்போ குழந்தைக்கு உடல்நிலை சரியாகிடுச்சா வாணி?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாணி எல்லா குறிப்பும் சூப்பர். புட்டு செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்

Be simple be sample

எங்க அம்மா செய்வாங்க கோதுமைபுட்டு செமையா இருக்கும்.ஆனா கோதுமைய அவிச்சு நல்லா காயவச்சு மிஷின்ல ரவை மாதிரி திரிச்சு அவிப்பாங்க இது ஈசியா இருக்கே..இப்படியும் செய்யலாமா..

மீண்டும் மகுடம் சூடியமைக்கு அன்பு வாழ்த்துக்கள் :) குழந்தை நலமா?

எல்லா குறிப்பும் வித விதமா தேர்வு செய்து அழகாக படங்களோடு வெளி வந்திருக்கு. நான் கோதுமை மாவில் தான் புட்டு செய்திருக்கேன், இப்படி வறுத்து அரைச்சுலாம் பண்ணதில்லை, சூப்பரா இருக்கு பார்க்க... ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோதுமை புட்டு செம‌ சூப்பர் ரெசிபி.. அம்மா இதே ரெசிபிய‌ .. கோதுமை ஊற வச்சு வேக‌ வச்சு அரைச்சு செய்வாங்க‌.. சோ யம்மி டிஷ்.. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி ரேவதி, உங்களோட ஊக்கமான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி :))

இந்த குறிப்பின் சொந்தக்காரர் ஸ்வர்ணா அவர்களுக்கு மிக்க நன்றி.
ஸ்வர்ணா, முழு கோதுமையை வறுத்து உடைத்து புட்டு செய்தது இது தான் முதல் முறை,
அதீத வாசனையாக இருந்தது. சுவையான குறிப்பிற்க்கு நன்றி :-)

உங்களின் பதிவிற்க்கும், பாராட்டிற்க்கும் நன்றி.
குழந்தை இப்போது நலமுடன் இருக்கிறார். விசாரித்தமைக்கு நன்றி :-)

நீங்கள் அளிக்கும் உற்ச்சாகத்திற்க்கு மிக்க நன்றி ரேவதி

நானும் இந்த முறையில் இப்போத்தான் முதன் முதலா செய்தேன் , ரொம்ப நல்லா இருந்தது. உங்கள் பதிவிர்க்கும், வருகைக்கும் மிக்க நன்றி.

இந்த முறையிலும் ட்ரை பண்ணிப் பாருங்க வனி, நல்லா இருக்கும்.
குழந்தை இப்போது நலமே :)
விசாரித்தமைக்கு நன்றி

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி கனிமொழி :)
ஒரு முறை முடிந்தால் இவ்விதத்தில் டிரை பண்ணிப் பாருங்க, நல்லாயிருக்கும்.

ஹெல்தி கோதுமை புட்டு... செய்முறையும் எளிதாக‌ இருக்கு.. அவசியம் செய்து பார்ப்பேன்..

"எல்லாம் நன்மைக்கே"

வாணி எனது குறிப்பை செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி :) சுவை உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோசம் :))))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.