சீரகம் பாகு வைத்து போடு மெஹந்தி டிசைன்

நமஸ்காரம்

நம் பழங்கால முறையில் சீரகம் பாகு வைத்து அதில் குங்குமம் சேர்த்து கைகளில் மருதாணி டிசைன் போடும் முறை தெரிந்தால் தயவுசெய்து செய்முறையுடன் கூறவும். இன்னும் இரண்டு மாதத்தில் எனக்கு வளைகாப்பு எனக்கு இந்த முறையில் கைகளில் மருதாணி டிசைன் வைத்துகொள்ள ஆசை.
அமெரிக்காவில் வாழும் எனக்கு நம் பாரம்பரியத்தை பின்பற்ற உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்.

சீரகமா அது சீனியா?
சீனியில் தான் பாகு வச்சி போடுவாங்க‌. நீங்க‌ சீரகம்னு சொல்றது புதுசா இருக்கு.

http://www.arusuvai.com/tamil/node/8070 எல்லாப் பக்கமும் படிங்க.

‍- இமா க்றிஸ்

இமா அக்கா

நான் மருதானி செய்யும் முறை படித்தேன். அதில் ஒரு சந்தேகம். தகர‌ டப்பா வை stove இல் வைக்கலாமா. எவெர்சில்வெர் பாத்திரதில் வைக்க‌ கூடாதா. எனக்கு gas அடுப்பு இல்லை. glass top stove தான் இருக்கு. அதான் கேக்கிறேன்

ஒரு பழைய டின்னுல நடுவில் சின்ன கப் வைக்கணும். அதை சுற்றி டின் உள்ள சர்க்கரை, சீரகத்தை பரப்பணும். இந்த டின்னை அடுப்பில் சிறு தீயில் வைக்கணும். அந்த டின்னின் வாய் பகுதியை முழுவதுமா மூடும் விதமான ஒரு கப் (அடி குழியான கப்) வைத்து வாய்ப்பகுதியை மூடி, அந்த கப்பில் நீர் ஊற்றணும். சூடு ஆக ஆக அந்த ஆவி மேல் உள்ள குளிர்ந்த நீர் உள்ள கப்பில் பட்டு, வேர்த்து சொட்டு சொட்டா டின்னின் நடுவில் உள்ள கப்பில் சேரும். அதை எடுத்து அதில் குங்குமம் கலந்து கையில் டிசைன் பண்ணலாம்.

வளைகாப்புன்னு சொல்றீங்க... இந்த ஸ்டேஜுல இந்த பொய் மருதாணி சேஃபானதா எனக்கு தோணல. இதை வெச்சா சில நேரம் கையில் அரிப்பு ஏற்படும், போகும் போது கையில் தோல் உரியும். என்ன இருந்தாலும் சீரகம் தீஞ்சு கிடைக்கிறது தானே... யோசிச்சு பண்ணுங்க. இயற்கையான மருதாணி அரைச்சு வைப்பது போல எதுவும் அழகும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை. என் கருத்து இது... தவறாக எண்ண வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சொல்றதை நானும் ஆமோதிக்கிறேன். செய்து பார்த்தது இல்லை. ஆனால் அந்த த்ரெட்ல ஒரு கமண்ட் படிக்கும் போதே... எனக்கு தொண்டை கமறுற மாதிரி நினைப்பு வந்துது. :-) அது பக்குவம் தப்பாகிட்டா இருமித் தள்ளிரும் போல இருக்கு. :-)

நீங்களே மருதாணி அரைச்சு கோன்ல வைக்கலாமே!

‍- இமா க்றிஸ்

அன்புள்ள vanitha அக்கா

நான் வசிக்கும் இடம் மிகவும் குளிர் பகுதி அதுவும் உறைபனி காலம் -4டிகிரி பனி மழை வேறு. இங்கே வசிப்பவர்களுக்கு மருதாணி என்பதே தெரியாது. பச்சை குத்துவது மட்டும் தான் தெரியும். மருதாணி கோன் கூட கிடைக்காது. அது மட்டும் அல்ல சிலசமயங்களில் இங்கே தண்ணீர் குழாய் திறந்தால் ஐஸ் கட்டி தான் வரும்.

இந்த சமயத்தில் நான் மருதாணி வைத்தல் சளி, ஜுரம் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக ஒரு வித மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. இங்கே கர்ப்பிணி பெண்கள் அதிகம் வெளியில் செல்லகூடாது, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் கர்ப்பிணிகள் குளிக்கவே வேண்டும் என்பது மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

நான் சிறுவயதில் சீரகத்தில் செய்வதை பார்த்துள்ளேன். அதனால் தான் நான் கேட்டேன்.

nikila akka

சீரகத்தில் செய்வது பார்த்திருக்கிறேன். ஆனால் சர்க்கரையில் பாகு என்பதை நான் எப்பொழுது தான் கேள்விபடுகிறேன். சீனி பாகு முறை உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து அதன் செய்முறையை சொல்லுங்கள் ப்ளீஸ்.

அக்கா எங்கே மருதாணி என்பதே கிடைக்காத ஒன்று. நடிகர் நடிகைகள் படங்களை உடல் முழுவதும் பச்சை குத்துவது தான் தெரியும். அதனால் தான் இந்த முறையை கேட்டேன்.

அன்புள்ள ima அக்கா

நான் நீங்கள் கொடுத்த website link பார்த்தேன். மிக்க நன்றி.

அன்புள்ள அக்கா

எனக்கு இதன் செய்முறை விளக்கம் படங்களை அனுப்புங்கள் அக்கா. எனக்கு சிறிதும் குழப்பம் இல்லாமல் இருக்கும். இதை டின் தவிர வேறு இந்த பாத்திரத்திலும் செய்யமுடியாத?

மேலும் சில பதிவுகள்