மல்லி துவையல்

தேதி: January 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

மல்லி - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 3 பற்கள்
தேங்காய் - சிறிது
கறிவேப்பிலை - 4 கொத்து
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 2 (சிறியது)
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டைத் தோலுரித்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியை சூடாக்கி, காய்ந்த மிளகாயையும், மல்லியையும் போட்டு வறுக்கவும்.
சிவந்து வரும் போது வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
முக்கால் பதமாக அரைப்பட்டவுடன் அதனுடன் தேங்காய், பூண்டு மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
சுவையான மல்லி துவையல் ரெடி. விருப்பப்பட்டால் கடைசியாக கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீண்டும் கிச்சன் குயின்!! சூப்பருங்க :) வாழ்த்துக்களூம் பாராட்டுக்களும். ஆரம்பத்தில் இருந்ததை விட படங்கள் இப்போது அழகாக இருக்கின்றன. தொடர்ந்து உங்க பங்களிப்பு இந்த பகுதியில் இருக்கணும்னு அன்போடு கேட்டுக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்புகள் அருமை.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹேமா
குறிப்புகள் அருமை.வாழ்த்துக்கள்.

ஹேமா,
சூப்பர் சட்னி ..
வாழ்த்துக்கள் குயின்

என்றும் அன்புடன்,
கவிதா