கை முறுக்கு 1

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 4 டம்ளர்
பொட்டுக்கடலை - 1 டம்ளர்
டால்டா - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

அரிசியை நான்கு அல்லது ஐந்து மணிநேரம் நீரில் ஊறவைத்து எடுத்து கொள்ளவும்.
பொட்டுக்கடலையை உரலில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த அரிசியை நீரை வடித்து உரலில் இட்டு, உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.
மாவு நன்றாக நைசாகவும், கெட்டியாகவும் இருக்குமாறு இடித்துக் கொள்ளவேண்டும்.
இடித்த மாவுடன் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து டால்டாவையும் கலந்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
மாவானது பதமாக, கையினால் சுற்றும் அளவிற்கு இருக்குமாறு பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு துணியின் மேல் மாவை கையினால் முறுக்காகச் சுற்றிக் காயவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், ஈரம் காய்ந்த முறுக்குகளை எடுத்துப் போட்டு சுட்டெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்