‍‍கம்பு வடை

தேதி: January 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கம்பு மாவு - அரை கிலோ
கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2 (அரைத்துக் கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு
எள்ளு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவுடன் கோதுமை மாவைச் சேர்த்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்த மாவுடன் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, தயிர், எள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வடை போல் தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தட்டி வைத்திருக்கும் வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
‍‍சுவையான கம்பு வடை தயார். சட்னியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயின் ஹேமாவுக்கு வாழ்த்துக்கள். ஹெல்தியான குறிப்பு ஹேமா

Be simple be sample

கிச்சன் குயின் ஹேமாவுக்கு வாழ்த்துக்கள் :) கம்பு வடை சூப்பர்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கம்பு என்னோட‌ ஃபெவரெட் தானியம், அதுல‌ எது செய்தாலுமே நல்லாயிருக்கும்!
உங்களோட‌ கம்புவடை சூப்பர்ங்க‌...