கேழ்வரகு களி

தேதி: January 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

கேழ்வரகு மாவு - 2 கப்
பச்சரிசி (அ) நொய் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு


 

பச்சரிசியைச் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் ஊற வைத்த அரிசியைப் போட்டு வேகவிடவும்.
அரிசி வெந்ததும், கேழ்வரகு மாவைத் தூவினாற் போல் சேர்க்கவும். (கிளற வேண்டாம்).
பிறகு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து, மேலே வேகாமல் இருக்கும் மாவை மட்டும் லேசாகக் கிளறிவிடவும். (அடியோடு கிளறக் கூடாது).
2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, மரக்கரண்டி அல்லது துடுப்பு வைத்து நன்றாகச் கிளறவும்.
தண்ணீர் தடவிய கிண்ணத்தில், சூடான களியைப் போட்டு நிரப்பி கவிழ்த்து விடவும். ஆரோக்கியத்திற்கேற்ற சுவையான கேழ்வரகு களி தயார். வேர்க்கடலை சட்னி, கருவாட்டு குழம்பு, மீன் குழம்பு மற்றும் கத்தரிக்காய் கடைசலுடன் சூடாகச் சாப்பிட சுவையாக இருக்கும்.

உலை நீர் அதிகமாக இருந்தால் மாவை சேர்த்ததும் கூழ் போல ஆகிவிடும். அதனால் மாவை சேர்த்த பின்னர் வடிதட்டை வைத்து பாத்திரத்தை மூடி சிறிதளவு தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். களியை கிண்டும் போது தேவைக்கேற்ப எடுத்து வைத்திருக்கும் உலைத் தண்ணீரை ஊற்றி கிளறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Tasty and healthy recipe.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹெல்தியான‌ சூப்பரான‌ டிஷ். அருமையா செய்து இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

சுவையான சத்தான குறிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நானும் கேழ்வரகு களி செய்துருக்கேன்! ஆனா நிறைய‌ கட்டி விழுந்திடும்! உங்க‌ செய்முறைப்படி செய்து பார்க்கனும்!!

கேழ்வரகில் களி செய்ததேயில்லை. உங்கள் படங்களைப் பார்த்ததும் செய்ய வேண்டும் போல் உள்ளது ரேவதி. அழகாக செய்து காட்டியிருக்கிறீர்கள் :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் &டீம் மிக்க நன்றீ

Be simple be sample

இப்போ உடல் எடையை குறைக்க‌ ட்ரை பண்ணிட்டு இருக்கேன். தினமும் கஞ்சி குடிக்க‌ என்னவோ போல‌ இருக்கு. களி செய்து பார்கிறேன். நன்றி ரேவ்ஸ்.

அன்புடன்
பாரதி வெங்கட்

Thanku friends.

Be simple be sample