ஆலூ பூரி

தேதி: January 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மாவு தயாரிக்க:
பொட்டேட்டோ ப்யூரி பவுடர் - 2 கப்
வெதுவெதுப்பான தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - அரை தேக்கரண்டி
ஃபில்லிங் செய்ய :
வேக வைத்த கோழி
கேரட், குடைமிளகாய், பச்சை பட்டாணி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
நசுக்கிய பூண்டு - சிறிது
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
எண்ணெய - பொரிக்க


 

பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து அரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் வேக வைத்த கோழி, கரம் மசாலாத் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். மாவினுள் வைக்க ஸ்டஃப்பிங் தயார்.
பொட்டேட்டோ ப்யூரி பவுடரில் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் சற்று தளர்த்தியாக பிசைந்து வைக்கவும்.
மாவை எலுமிச்சை அளவு எடுத்து தட்டில் வைத்து கையால் தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைக்கவும்.
ஓரங்களில் இருக்கும் மாவை பூரணத்தின் மேல் வைத்து மூடி உருண்டையாக ஆக்கவும். இதே போல் மீதமிருக்கும் மாவு மற்றும் பூரணத்தை வைத்து செய்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஆலூ பூரி தயார். மாலை நேர ஸ்நாக்ஸாக சாஸுடன் பரிமாறவும். 2 கப் அளவு பவுடர் எடுத்தால் 6 உருண்டைகள் வரை செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சாப்பிட தோனுது அருமை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆலுபூரி அருமையா இருக்குங்க‌!! சூப்பர்ங்க‌....

முசி
ஆலுபூரி அருமையா இருக்கு சூப்பர்....

புதுசா இருக்கு குறிப்பு, நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெரி இனோவேட்டிவ் டிஷ் முசி,கலக்குறீங்க. படங்கள் அருமை. பாராட்டுக்கள் :)

சிக்கன் டிஷ்ஷெல்லாம் பிடிக்காது. அந்த கடைசி ஸ்மைலி இங்க கூட்டிட்டு வந்துது. :) அது மட்டும் பிடிச்சிருக்கு முஸி.

‍- இமா க்றிஸ்

குறிப்பினை வெளியிட்ட‌ டீமிர்க்கு மிக‌ நன்றி.
முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் நன்றி :சுவர்ணா.
ரொம்ப‌ நன்றி : அனு.
வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி : நிஷா.
மிக்க‌ நன்றி :வனி.
பாராட்டிர்க்கு மிக்க‌ நன்றி :வாணி.
காய்கறி பூரணம் வைத்தும் செய்யலாம்,பதிவிர்க்கு நன்றி :இமாம்மா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.