ரோஜா குல்கந்து

தேதி: January 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

சிவப்பு ரோஜாக்கள்
கற்கண்டு
தேன்
ஸ்கேல்
உரல்
செராமிக் / கண்ணாடிச் சீசா
சீஸ் க்ளாத் / மஸ்லின்
கட்டுவதற்கு சணல் அல்லது ராஃபியா


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பூச்சிகள் இல்லாத, கிருமிநாசினி தெளிக்காத செடிகளிலிருந்து புதிதாகப் பூத்த ரோஜாக்களாகத் தெரிந்து பறித்துக் கொள்ளவும். பூக்களைப் பறிக்கக் காலை வேளையே ஏற்றது. பூக்களின் இதழ்களைப் பிரித்து எடுக்கவும்.
இதழ்களை ஓடும் நீரில் அலம்பிக் கொள்ளவும்.
நீரை வடிய விட்டு எடுக்கவும். (சாலட் ஸ்பின்னரில் போட்டு சுற்றினால் விரைவாக வடிந்து விடும்.)
நீர் வடிந்ததும் இதழ்களை நிறுத்துக் கொள்ளவும்.
இதழ்களின் ஒன்றரை மடங்கு எடை கற்கண்டு நிறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கற்கண்டை உரலில் போட்டுப் பொடிக்கவும்.
அதனோடு ரோஜா இதழ்களையும் சேர்த்து இடிக்கவும்.
அனைத்தையும் சுத்தமான, உலர்ந்த சீசா ஒன்றில் போட்டு, வாயை துணியால் கட்டி இரண்டு நாட்கள் வெயிலில் வைக்கவும்.
மூன்றாவது நாள் (அல்லது கலவை அதிகம் வரண்டு காணப்படும் சமயம்) மூன்று மேசைக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து மீண்டும் வெயிலில் வைக்கவும்.
காலநிலையைப் பொறுத்து நான்கு அல்லது ஐந்து நாட்களில் ரோஜா இதழ்கள் பதமாகி இருக்கும். அதன் பின்னர், சீசாவை இறுக்கமாக மூடி வைத்து தேவையான போது பயன்படுத்தலாம். எடுப்பதற்கு எப்பொழுதும் சுத்தமான உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்தவும்.

பாரசீக மொழியில், 'குல்' என்றால் பூ அல்லது இதழ் என்றும் 'கண்ட்' என்றால் இனிமை என்றும் பொருளாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Supero super :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு இமா,

குல்கந்து அருமை. இது இளஞ்சிவப்பு நிற‌ ரோஜாவில் தானே செய்வாங்க‌. கட்டிச் சிவப்பிலும் செய்யலாமா?

அன்புடன்
ஜெயா

குறிப்பு : இந்த‌ ராஃபியா சந்தேகம் மறுபடியும் வந்திருச்சு. இங்க‌ (சென்னை) நெகிழியில் ஒரு பாக்கிங் வயர் வரும். அதுதானா இது.

Imma supersweet recipe thanks

சூப்பரா இருக்கு. குல்கண்ட் இவ்ளோ ஈஸியா செய்லாமா? கண்டிப்பா செய்து பார்க்கிறேன். சூப்பரா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

இவ்வளவு ஈசியாக‌ ரோஜா குல்கந்து செய்யலாமென‌ இப்பொழுதுதான் தெரிகிறது!!

சூப்பர்....

Unga recipe very super but enaku oru doubt panneer rose or bangalore rose ah pls reply

ரோஜா குல்கந்து பார்க்க செய்யனும் போல இருக்கு. ரோஜா பூக்கட்டும் செய்கிறேன். ஆனால் உரல் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு..

இவ்ளோ ஈசியா செய்யலாமா குல்கந்து ரொம்ப அருமையா இருக்குங்கம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரோஜா குல்கந்து சூப்பர் இமா, உங்களுக்கு இப்போது வெயில் காலம் , செய்துட்டீங்க, எங்களுக்கு ரோஜாவுக்கும், வெயிலுக்கும் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதே :)
படங்கள் அனைத்தும் அருமை. சீசா சூப்பர், ஊருக்கு சென்ற போது எங்கு தேடியும் சீசா (ஊறுகாய் ஜார்)கிடைக்கவில்லை எனக்கு.
இந்த குல்கந்து அப்படி சாப்பிடுவதா ? இல்லை வேறு ஏதாவது (பான் ஷாட் போன்று) இனிப்புகள் செய்ய பயன் படுத்துவதா?

:-) //Supero super :)// கருத்துக்கு ஒரு நன்றி. என்னைச் செய்து பார்க்கத் தூண்டியதற்கு இன்னொரு நன்றி. :-)

பான் ஷாட் போடப் போய்... குலகந்த் என்றால் என்ன என்று மேலோட்டமாகத் தேடி முடித்து... கிச்சன்ல போய் நிற்கிறேன்... கண் முன்னால் கொத்துக் கொத்தாக சிவப்பு ரோஜா. :-) பிறகு... மீண்டும் கூகுளில் அலசி ஆராய்ந்து... என் மனம் சொன்ன அளவுகளில் பரிசோதனை செய்து... இரண்டு வகை ரோஜா குல்கந்து போட்டு வைத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

//இளஞ்சிவப்பு நிற‌ ரோஜாவில் தானே செய்வாங்க‌.// அது கலர் இப்படி வராது ஜெயா, வரல. டெக்க்ஷரும் இந்த அளவு ரசிக்கிற மாதிரி இருக்கல. வாசனையும் சுவையும் மட்டும் சூப்பரா இருந்துது. அது ஒரு மென்மையான சுவை... 'ரோஸ் வாட்டர்' போல.

//கட்டிச் சிவப்பிலும்// பூ கிடைச்சுது; ட்ரை பண்ணினேன். என் வீட்டுத் தோட்டத்தில் உலவும் போது, எதெல்லாம் பச்சையாகச் சாப்பிட முடியுமோ அவையெல்லாம் வாயில் போட்டு விடுவேன். அந்த அனுபவம்தான், இந்தப் பூ பொருத்தமாக இருக்கும் என்று சொல்லிற்று. சுவை நல்லா இருக்கு; நாவெல்லாம் சிவந்துருது. ;)

ராஃபியா - //பாக்கிங் வயர்// அடிப்படையில் ராஃபியா இயற்கை நார்தான். அதே போல பேப்பரில் தயாரானதை இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். நீங்கள் சிந்தெடிக் ராஃபியாவைச் சொல்கிறீர்கள் என்று தோன்றுகிறது. http://www.arusuvai.com/tamil/node/16705 இந்த த்ரெட்டில் உள்ளதைச் சொல்கிறீர்களா? அது சிந்தெடிக்.

மூன்று வகைகளுமே பின்னல் வேலைகளுக்கும், பொதி கட்டுவதற்கும் பயன்படுகின்றன.

:-) சணல்... தூசு உள்ளே விழும். அதனால்தான் கட்டுவதற்கு ராஃபியாவைத் தெரிந்தெடுத்தேன். மற்றப்படி இதுதான் வேண்டும் என்பது அல்ல.

‍- இமா க்றிஸ்

நன்றி நிஷா. :-)
~~~~~ ~~~~
எப்போதான் இந்த டார்லிங்கை விடப் போறீங்க பாலநாயகி!! இதுதானே கடைசி முறை!! அப்படியாக இருந்தால்... ரொம்ப தாங்ஸ்க.
//குல்கண்ட் இவ்ளோ ஈஸியா செய்லாமா?// இதை விடவும் ஈஸியா செய்யலாம். குறிப்பு அனுப்ப ரெடியா இருக்கு. ஒரேயொரு படம் திரும்ப எடுக்க வேண்டியதா வந்துது. ;( செடியில் போதுமான அளவு பூக்கள் வரக் காத்திருக்கிறேன். பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

:-) நன்றி அனு. மேலே பாலநாயகிக்கு சொல்லியிருப்பதைப் படிச்சுப் பாருங்க.
~~~~ ~~~~
மலர்மாறன்... //panneer rose or bangalore rose ah// உங்களுக்கு இதில் எது (வீட்டில்) நிறையப் பூத்து இருக்கு?

பன்னீர் ரோஜா... பெங்களூர் ரோஜால்லாம் கூகுள் பண்ணிப் படம்!! பார்த்தேன். :-))

வாசனையான மலர்களிலிருந்து வாசனையும் சுவையும் ஒன்று சேர்ந்த குல்கந்து கிடைக்கும். ஒன்றிரண்டு இதழ்களைச் சாப்பிட்டுப் பாருங்க. இதழ்கள் கொஞ்சமாவது சதைப் பிடிப்பாகவும் இருக்கணும். ரொம்பவும் மெல்லிசா இருக்கிற இதழ், குல்கந்த் சுவையாக இருந்தாலும் தனியே சாப்பிட... டெக்க்ஷர் நல்லா இல்லை. வேற எதுலயாவது சேர்த்துக் கொள்வதற்கு சரியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

//இப்போது வெயில் காலம் , செய்துட்டீங்க// ;) அதேதான் நடந்துச்சு வாணி. விட்டா 2016 வரை காத்திருக்கணும். அப்போ மறந்துருவேன். :)

//சீசா// ;)) இப்படி உள்ள செராமிக் சீசாக்களை (b)புய்யான் என்போம். என்ன பாஷை இது என்று தெரியல. தலைப்புல போட்டிருக்கேன். யாராச்சும் தெரிஞ்சவங்க கண்ணுல இது பட்டா கருத்துச் சொல்லுங்க.

//அப்படி சாப்பிடுவதா ?// அப்படியே சாப்பிடலா(மா)ம். ;D அல்லது பான்ஷாட். இது ரெண்டும்தான் நான் பண்ணிட்டு இருக்கிறது. மருத்துவப் பயன்பாடுகள் நிறைய இருக்கு போல இருக்கு. மில்க் ஷேக், ஃபலூடா போல ட்ரிங்ஸ்ல சேர்த்தா நல்லா இருக்கும். சமைக்கிற ஐட்டத்துல சேர்த்தா சுவை மட்டும் வேணுமானால் கிடைக்கலாம்... இருக்கிற நல்ல விஷயம் எல்லாம் காத்துல போய்ரும்.

‍- இமா க்றிஸ்

நன்றி சுவா. :-)

//உரல்// உரல் என்று பேருக்கு இதை வைச்சிருக்கிறன். உள்ள வைச்சு இடிக்க ஏலாது தர்ஷா. ;( //ரோஜா பூக்கட்டும் செய்கிறேன்.// ஆஹா! :-) பூக்களைப் பிடுங்க முன்னம் மரத்திலயே வைச்சு ஒரு படம் எடுத்துப் போடுங்க. எனக்குப் பூக்கள் விருப்பம்.

‍- இமா க்றிஸ்

ரோஜா குல்கந்து ஒரிஜினலா நாட்டு ரோஜா (சிவப்பு / பின்க்) இரண்டிலும் செய்யலாம். நான் சிறு பிள்ளையாக இருந்த போது ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டில் இருந்து விஷேஷ நாட்களில் பிரியாணி வரும். அவர்கள் ரோஜாவில் குல்கந்து செய்து பிரியாணியோடு அனுப்புவார்கள். அது இப்படி பதப்படுத்தும் முறை அல்ல... தக்காளி இனிப்பு போல சமைத்திருப்பார்கள். பிரியாணிக்கு தொட்டுக்கொள்ளவும், பிரியாணி உண்ட பின் இனிப்பாக அப்படியே சாப்பிடவும் மிகுந்த சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள் நிரைந்தது குல்கந்து. இது உடல் சூட்டை குறைக்கும். அதனால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை போக்கும், வெள்ளைபடுதலை நிறுத்தும். அது மட்டுமல்ல உடல் சூட்டால் ஏற்படும் பல பிரெச்சனைகளும் தீர்வு. ரத்தத்தை புரிஃபை பண்ணும். அசிடிட்டி, அல்சர் போன்றவற்றை குணமாக்கும். கர்ப்பப்பையை பலப்படுத்தும். ஜீரணத்தை தூண்டும். - இது எனக்கு ஒரு மருத்துவர் சொன்னது, எனக்கும் தந்தார்கள்.

முக்கியமா வெய்யில்ல பயணம் செய்துட்டு வந்தா ஒரு ஸ்பூன் சாப்பிடுவேன். சூடு குறையும், தலைவலி வருவது கட்டுப்படும்.

நான் இதுவரை செய்ததில்லை... ஆனால் இதை வெல்லம் கொண்டும் செய்யலாம், அரைத்தும் செய்யலாம் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் விட நீங்க செய்திருப்பது போல இடித்து செய்வது நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது இமா. இது தானே பழைய முறையா இருந்திருக்க முடியும். ப்ளெண்டரில் அரைத்தால் சுவை மாறக்கூடும்.

இதை கொண்டு ரோஜா ஃப்ளேவர் சேர்க்கக்கூடிய பாயாசம், ஃபலூடா, ஐஸ்க்ரீம், குல்ஃபி, மில்க் ஷேக், பான் ஷாட் சில இனிப்பு வகைகள் கூட செய்யலாம். பீடாவிலும் வைப்பார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கவே கண்ணை பறிக்குதுமா. சூப்பர்ப். உங்க‌ பிரசன்டேசன் எல்லாமே அசத்தல்தான்.
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

என்னிடம் இது போல சீசா இல்லை. வேறு எந்த பாத்திரத்தில் வைத்து வெய்யிலில் வைக்கலாம்?? கண்ணாடி பாட்டில் கூட கிடையாது. :( பூக்கள் கொஞ்சம் பூத்திருக்கு, செய்யலாம் என்று பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கண்ணாடி பாட்டில் கூட கிடையாது.// ஈஸி. :-) கண்ணாடி டம்ளர்ல அல்லது செராமிக் காஃபி மக்ல துணி கட்டி வெயில்ல வைச்சா போச்சு.

பதமானதன் பிறகு டம்ளர் வாய்க் அளவுக்கு தக்கை (cork) கிடைச்சா அப்படியே மூடி வைக்கலாம். அல்லது... க்ளாட் ராப் போட்டு வைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

ரோஜா குல்கந்து கடையில் வாங்கி சாப்பிட்டதுண்டு.ஆனால் செய்முறை எளிமையாக‌ தான் உள்ளது.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Thanks imma :) will try.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா,
சூப்பர் ..

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பரா இருக்கு அம்மா.. ட்ரை பண்ணி பார்க்கிறேன்..

உங்க கிட்ட ஒருத்தர் குல்கந்து பற்றி கேட்கவும் ஏன் இமாம்மாகிட்ட கேட்கிறாங்கனு சர்ச் பண்ணேன்.. உங்க குறிப்பே இருக்கு.. :) :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

குல்கந்து எப்படி செய்முறை பார்க்கவே அழகா இருக்கு இன்னைக்கே try பன்றேன் SIS

எல்லாம் நன்மைக்கே