வணக்கம்,எனக்கு இப்போது 6வது மாதம் நடக்கிறது.இரவில் தூங்கும் போது ஒருக்களித்தே படுப்பதால் கால் மிகவும் கடுக்கிறது அதனால் தூக்கமே வருவதில்லை இது நார்மலா இல்லை எனக்குத்தான் அப்படி தெரியுதானு தெரியலை மேலும் குழந்தையின் அசைவு முதலில் அடிவயிற்றில் தெரிந்தது இப்போது கீழே இருந்து தொப்புள் வரை தெரிகிறது நானும் கணவரோடு வெளிநாட்டில் இருக்கிறேன் அடுத்த மாதம் தான் செக்கப்போகனும்
அனுபவமுள்ள தோழிகள் ஆலோசனை வேண்டும்
Enakum 6month tha...leg pain
Enakum 6month tha...leg pain erukum nu doctor sonnanga. ..night thoogame varathu
hi revathi
Hi revathi
Idhu normal dhann pa. Payapada thevai ilai. Thodai vali irukkum. Iduppu vali irukkum. Asaivu iruppadhum normal dhaan. Innum natgal chella chella udhai kooda irukkum. Enjoy pannunga. Payapadadheenga.
--
hi enakum 6 vathu matham than
hi enakum 6 vathu matham than kai kaal vali irukum asaivuhal inimelthan athikamaha irukum enakum nandraaha therihirathu thoonga mudiyavillai
நன்றி
எனக்கு மட்டும் தான் இப்படி உள்ளதா என குழம்பினேன் ஆலோசனை கூறி தெளிவுபடுத்திய அனைத்து தோழிகளுக்கும்
நன்றி
true love never fail
ரேவதி முருகன்
எதினால் ஒருக்களித்தேப் படுக்கின்றீர்கள் !? Flat ஆகப் படுத்துப் பாருங்கள், முதுகுக்கும் இதமாக இருக்கும். காலும் கடுக்காது. முயற்ச்சித்துப் பாருங்கள்.
vani selwyn
ஒருகலிது தான் படுக்கானும்னு எல்லோரும் சொல்லரங்கா
hai vani
டாக்டர்தான் சொன்னாங்க ஒருக்களித்துபடுக்க சொல்லி Flatஆக படுத்தால் ரத்தஓட்டம் சீராக இருக்காதாம்
true love never fail
ரேவதி,
நாம் எப்போதுமே ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தாலும், தூக்கத்தில் நம்மை அறியாமல் புரண்டு படுப்பதும், Flat ஆக படுப்பது வழக்கம் தான். சில சமயம் இரவில் படுக்கும் போது ஒருக்களித்துப் படுத்தாலும் காலையில் எழுந்திருக்கையில் வேறு Position ல் படுத்திருப்போம். அது போன்று தான் கர்ப்ப காலத்திலும் 8 மணி நேரம் தூங்கினால் அத்தனை மணி நேரமும் Flat ஆக யாரும் படுப்பதில்லை, நீங்கள் வலது மற்றும் இடது புறங்களில் மாறி மாறி ஒருக்களித்து படுப்பதுடன், கால் கடுக்கும் போது Flat ஆகவும் படுத்திருக்கலாம். வயிறு பெரிதாக இருக்கையில் சம நிலையில்(Flat) படுக்கும் போது வயிறு நெஞ்சு பகுதியை அழுத்துவதால் நெஞ்சுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் வேறு பாடு இருக்கும். மூச்சு விட சிரமமாக இருக்கும். ஆகவே தலைக்கு தலையணை வைத்து (ஒன்று or இரண்டு) தலை மற்றும் கழுத்துப் பகுதியை உயர்த்தி படுப்பதினால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது. இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். ஆறு மாதம் தானே ஆகிறது, போகப் போக இன்னும் வயிற்றின் எடை அதிகரிக்கும், அப்போது ஒருக்களித்தே இரவு முழுதும் படுக்க இயலாது:(( ஒரு பக்கம் முழுதும் மரத்துப் போன உணர்வு ஏற்ப்படும். முதுகும் வலிக்கும். படுக்கும் நிலையை இடையிடையே மாற்றி அமைத்தால் நிம்மதியாகவும் தூங்கலாம். தூக்கமின்மையினால் உண்டாகும் மன அழுத்தம் குறையும். முதுகு வலியும் குறையும்.
இது எனது கர்ப்ப காலங்களில் மருத்துவரின் ஆலோசனைப்படி நான் பின்பற்றியவை :)
ரேவதி முருகன்
படுப்பதை பற்றி நானும் டாக்டர்களிடம் கேட்டிருக்கிறேன்... எப்படி படுத்தா நிம்மதியா தூங்க முடியுதோ, வசதியோ இருக்கோ அப்படி படுங்கன்னு சொன்னாங்க. மல்லாக்க படுப்பது, திரும்பி படுப்பது, எழுந்து எழுந்து திரும்புவது... இதெல்லாம் எதுவும் இல்லை. நிம்மதியா தூங்க வேண்டியது இந்த நேரத்தில் உங்க ஆரோகியத்துக்கும், குழந்தை ஆரோக்கியத்துக்கும் முக்கியம். நான் எந்த பொஷிஷன்ல படுப்பேன்னு எனக்கே தெரியாது, தூக்கத்தில் எப்படி வேணும்னாலும் திரும்பிடுவேன்... பயந்த்துட்டே ஒரே பொஷிஷனில் படுத்திருந்தா அது தான் உண்மையில் நல்லதில்லை. இப்போ எந்த டாக்டரும் இப்படி படு அப்படி படுன்னு சொல்வாங்கன்னு எனக்கு தோணல.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani selwyn் vani vasu
உங்களது அனுபவங்களை கூறி தெளிவுபடுத்தியதற்கு நன்றி தோழிகளே
true love never fail