சப்பாத்தி புட்டு

தேதி: January 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் சப்பாத்தி புட்டு என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா அல்லது கோதுமை மாவு - 4 சப்பாத்தி செய்ய தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
மைதா அல்லது கோதுமை மாவைப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டி வைத்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தியாக திரட்டவும்.
தவாவைக் சூடாக்கி திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, இரு புறமும் சிறிது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இப்போது புட்டு செய்ய தேவையான சப்பாத்திகள் ரெடி.
சுட்டெடுத்த சப்பாத்திகளை ஆறவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
துண்டுகளாக்கிய சப்பாத்தியை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
அத்துடன் சர்க்கரை, நெய் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து, மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் போட்டு சுற்றி எடுத்தால் சப்பாத்தி புட்டு தயார்.

மீந்து போன சப்பாத்தியிலும் இது போலச் செய்யலாம். விருப்பப்பட்டால் ஏலக்காய் சேர்த்துப் பொடிக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நட்ஸ் தூவி கொடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்ப்ர் புட்டு இப்பவே செஞ்சு சாப்டனும் போல‌ இருக்கு. குறிப்பும் ஈசியா இருக்கு

புட்டு அப்படியே எனக்குதான் ;) நல்லாருக்கு சுமி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//சூப்ப்ர் புட்டு இப்பவே செஞ்சு சாப்டனும் போல‌ இருக்கு// அப்போ செய்து உடனே சாப்பிட்டுடுங்க‌...:0 உங்கள் பதிவுக்கு எனது நன்றீகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//புட்டு அப்படியே எனக்குதான் ;)// சுவாக்கு இல்லாத‌ புட்டா..எடுத்துக்கோங்க‌.. நன்றி சுவா.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பினை வெளியிட்ட‌ டீமிற்க்கும் குறீப்பினைக் கொடுத்த‌ கவிசிவாவிற்க்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆஹா சேமியா புட்டு, குழாய் புட்டு, ராகி புட்டு, கேழ்வரகு புட்டு கேள்விபட்டிருக்கிறேன்.. இது என்ன புதுசா சப்பாத்தி புட்டு.. சூப்பரா இருக்கு சுமி.. நிச்சயம் நான் ட்ரை பண்ணி போட்டோ போடுறேன்.. சூப்பர் அம்மிணி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பதிவுக்கு ரொம்ப‌ நன்றி ரேவதி. உங்க‌ போட்டோக்கு சுமி வெயிட்டிங்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....