குவாக்கமொலே

தேதி: January 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்கள் வழங்கியுள்ள குவாக்கமொலே என்ற மெக்சிகன் உணவுக் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

அவகாடோ - 2
எலுமிச்சை சாறு - 5 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 4 (சிறியது)
கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 3 பற்கள்


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். (தக்காளியை விதையுடன் சேர்க்கக்கூடாது).
அவகாடோவைப் பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் விதையை எடுக்கவும்
பிறகு அவகாடோவின் சதைப் பகுதியை சிறிய கரண்டியை வைத்து சுரண்டி எடுக்கவும். அதனுடன் பாதி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பிசையவும்.
அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்துக் கிளறவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும். (அதிகம் பிசைந்துவிடக் கூடாது). கடைசியாக மீதமுள்ள எலுமிச்சை சாறைச் சேர்த்துக் கிளறி, ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு பரிமாறவும்.
சுவையான குவாக்கமோலே ரெடி.

இது டார்டியா சிப்ஸ், ஃபலாஃபல், மற்ற எல்லா வகையான மெக்சிகன் உணவுகளுக்கும் பொருந்தும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்யாசமான பெயரா இருக்கே சூப்பருங்கோ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்லா இருக்கு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

/வித்யாசமான பெயரா இருக்கே சூப்பருங்கோ :)// டேஸ்ட்டும் வித்தியாசமா தான் இருந்தது. நன்றீ சுவா..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நன்றி முசி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பினை கொடுத்த‌ லாவண்யாவிற்க்கும், வெளியிட்ட‌ டீமிற்க்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள் சுமி..
அனைத்தும் கவர்கிறது ..

என்றும் அன்புடன்,
கவிதா

சுமி நேற்றே பார்த்தேன் மெபைல் என்பதால் தமிழ் டைப் பண்ண கஷ்டம் அதான் நேற்று பதிவு போட முடியவில்லை.. நேற்று முகப்பே அழகாக இருந்தது.. உங்களுடைய ஒவ்வொரு டிஸ்சும் சூப்பர் சுமி.. குவாக்கமொலே பெயரை வித்தியாசமா இருக்கு.. செய்முறை ஒவ்வொன்றும் சூப்பர்.. படங்கள் பளீச்.. கலக்குறீங்க.. ம்ம் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்க.. வாழ்த்துகள் சுமி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கலக்கல் குவாக்கமொலே சுமி, பாராட்டுக்கள்

உங்கள் பதிவுக்கு நன்றி கவி..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

எப்ப‌ வாழ்த்து சொன்னா என்ன‌ ரேவதி.. நீங்க‌ எந்த‌ மொழியில‌ வாழ்த்து சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சியே..:) உங்கள் பதிவுக்கும், பாராட்டுக்கும் எனது நன்றிகள் ரேவதி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பாராட்டுக்கு நன்றி வாணி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அவகாடோ எனக்கு பிடிக்காது பா, ஆனா இது பார்க்கவே வித்தியாசமா சாப்பிடலாம்னு தோணுது, சூப்பர் மா

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப‌ நன்றி ஷீலா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....