கோலக் கோஸ்டர்

தேதி: January 26, 2015

5
Average: 5 (3 votes)

 

ஒரே அளவான சிறிய சதுர டைல்கள்
மெதைலேட்டட் ஸ்ப்ரிட்
டிஷ்யூ
பேப்பர்
பென்சில் / பேனா
ஸ்கேல்
ப்ளெய்ட் டைல் பெயிண்ட் - வெள்ளை
ஸ்டைலஸ்
ப்ரஷ் - இல. 1
ஃபோம் ஷீட்
டபுள் சைடட் டேப்
கத்தரிக்கோல்
க்ராஃப்ட் நைஃப்
கட்டிங் மாட்

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் டிஷ்யூவில் மெதைலேட்டட் ஸ்பிரிட் தொட்டுக் கொண்டு டைல்களைச் சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு கோஸ்டர் மட்டும் செய்வதானால் நேரடியாக டைலில் ஸ்கேல் வைத்து புள்ளிகள் வைத்துக் கொள்ளலாம். செட்டாகச் செய்வதானால், ஒரு டைலை கடதாசியின் மேல் வைத்து சுற்றிலும் கோடுகள் வரைந்து கொள்ளவும்.
எத்தனை புள்ளிகள் வரவேண்டும் என்பதைப் பொறுத்து கோடுகள் வரைந்துக் கொள்ளவும்.
கோட்டின் வழியே அழுத்தமாக மடித்து விட்டு, பெரிய சதுரத்தை வெட்டிக் கொள்ளவும்.
கடதாசியை டைலின் மேல் வைத்து, ஒவ்வொரு வரியாக மடித்துப் பிடித்து டைலில் பென்சிலால் புள்ளிகள் வைக்கவும்.
ஸ்டைலஸில் வெள்ளை பெயிண்டைத் தொட்டு, பென்சில் அடையாளங்களின் மேல் புள்ளிகள் வைக்கவும்.
இதே போல மற்ற டைல்களிலும் புள்ளிகள் வைத்து காய விடவும்.
ஒவ்வொரு டைலிலும் பொருத்தமான கோலத்தை முதலில் பென்சிலால் வரையவும்.
அதன் மேல் ப்ரஷ்ஷால் வெள்ளை பெயிண்ட் கொண்டு வரைந்து காய விடவும். (பெயிண்ட் செய்யும் போது இடைக்கிடையே ப்ரஷ்ஷைக் கழுவித் துடைக்காவிடில் கோடு சீராக வராது.) நான்கு மணி நேரம் கழித்து, இரண்டாவது கோட்டிங் கொடுக்கவும். இங்கு பயன்படுத்தியிருக்கும் புள்ளிக் கோலங்கள் அனைத்தும் அறுசுவையின் கோலப் பகுதியிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. படத்தில் காட்டியுள்ள கோலத்தைப் போடும் முறைக்கான லிங்க் - http://www.arusuvai.com/tamil/node/29018
இங்கு உள்ள கோலம் போடும் முறை, தொடர்ந்து வரும் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. http://www.arusuvai.com/tamil/node/29131
இந்தக் கோலத்திற்கான லிங்க் - http://www.arusuvai.com/tamil/node/29182
இன்னொரு ஐந்து புள்ளிக் கோலம் இது. வரையும் முறையை இங்கே காணலாம். http://www.arusuvai.com/tamil/node/29345
பெயிண்ட் செய்து முடிந்ததும், 48 மணி நேரம் காய விட்டு, 165°c வெப்பநிலையில் டைல்களை பேக் செய்யவும். முதலில் டைல்களை அவனினுள் வைத்து, வெப்பநிலையைத் தெரிவு செய்து விட்டு 'இண்டிகேட்டர்' லைட் அணையும் வரை காத்திருக்கவும். லைட் அணைந்த நேரத்திலிருந்து பத்து நிமிடங்கள் கழித்து, அவனை அணைக்கவும். டைல்கள் முற்றாக ஆறும் வரை அவனிலேயே விட்டு வைக்கவும்.
ஆறிய பின்பு, மென்மையான ஸ்பாஞ்சை நனைத்து, ஒரு துளி 'ஹான்ட் வாஷ்' அல்லது ஷாம்பூ தொட்டு நுரைக்க வைத்து பென்சில் அடையாளங்களை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். தேய்க்க வேண்டாம். ஒற்றித் துடைத்து டைலின் பின்புறம் ஈரம் முற்றாக நீங்கும் வரை வைத்திருக்கவும்.
படத்திற் காட்டியவாறு, டைலின் பின்புறம் டபுள் சைடட் டேப் போடவும். டைலின் ஓரம் முழுவதும் சுற்றிலும் டேப் வருவது அவசியம். டேப் டைலுக்கு வெளியே நீண்டிருந்தால் பரவாயில்லை. நடுவிலும் ஒன்றிரண்டு வரிகள் தேவைப்படும்.
முதலில் ஒரு டைலில் மட்டும் ஃபோமை ஒட்டவும்.
மேலதிக ஃபோமை க்ராஃப்ட் நைஃபால் ஒட்ட வெட்டி விடவும்.
இந்த ஃபோம் பகுதி, கோஸ்டர் மேசைகளில் உராயாமல், நழுவாமல் இருக்க உதவும்.
மீதி டைல்களையும் இதே விதமாக தயார் செய்து கொண்டால், புதுமையான கோஸ்டர் செட் உங்கள் கையில். இவற்றைப் பரிசாகக் கொடுக்கலாம் அல்லது உங்கள் வரவேற்பறை டீ டேபிளில் பயன்படுத்தி விருந்தினரிடம் பாராட்டுப் பெறலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சம சூப்பர். இங்கே சின்ன சின்ன ப்லைவுட்டில் இது போல செய்வாங்க. இந்த சைஸ் டைல்ஸ் வாங்க முடிஞ்சா செய்து பார்க்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இந்த சைஸ் டைல்ஸ் வாங்க முடிஞ்சா// நிச்சயம் கிடைக்கும் வனி. கோஸ்டருக்கு கிச்சன் சுவரில் பொருத்தும் டைல் அளவு சரியாக இருக்கும். Lanka Walltiles, Italian, French makes இந்த சைஸ்ல இருக்கு. ஆனால்... வெள்ளை, பிங்க், பேஜ், பேல் ப்ளூ என்று லைட் கலர்கள்ளதான் கிடைக்கும். முன்னால லைட் க்ரீன் கிச்சன் டைல்ல ஒரு கோஸ்டர்... ஒரு வெப்சைட் பெயர் பெய்ண்ட் செய்திருக்கிறேன். மேலே இருப்பவை... பெரிய ஃப்ளோர் டைல்களிலிருந்து வெட்டி எடுத்தவை.

//சம சூப்பர்.// :-) சந்தோஷம். மிக்க நன்றி வனி.

ஹால்ல வைச்சிருக்கிறேன். பயன்படுத்துற ஒவ்வொரு சமயமும் சந்தோஷமா இருக்கும். என் வேலையை ஈஸியாக்கினது அறுசுவையில் ஏற்கனவே இருந்த கோலங்கள். அதற்காக அறுசுவைக்கும் சுபத்ராவுக்கும் என் நன்றிகள். :-)

‍- இமா க்றிஸ்

ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா. அசத்திட்டீங்க. :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பரா இருக்கு.. வீடு உங்க கை வண்ணத்தில் அழகா இருக்கும் . அதை பார்க்க வேண்டும்.

ரொம்ப அழகாக உள்ளது அம்மா.. புதுமையாக உள்ளது.. சூப்பர்ம்மா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி உமா & ரேவ்ஸ். :-)

தர்ஷா... செய்வது எல்லாம் வீட்டில் இராது. திருகோணமலை வீட்டைப் போல இல்லை இங்கு. அலங்காரப் பொருள் என்று அதிகம் வைக்க இடம் இல்லை. :( அனேகமானவை அன்பளிப்பாகிப் போகும். இது நிச்சயம் என்னிடம்தான் இருக்கும். :-)

ஒரு விடுமுறைக்கு வாங்களேன். எங்களோடு தங்கலாம்.

‍- இமா க்றிஸ்