பேச்சுலர்ஸ் பருப்பு கீரை

தேதி: January 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. மனோகரி அவர்களின் பேச்சுலர்ஸ் பருப்பு கீரை குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

துவரம்பருப்பு - கால் கோப்பை
ஸ்பைனாச் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 5 பற்கள்
புளி - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
எண்ணெய் - அரை தேக்கரண்டி


 

பருப்பை சுத்தம் செய்து அலசி குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கீரையுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
கீரை வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கீரையில் கொட்டி இறக்கி விடவும்.
மத்து / ப்ளெண்டர் வைத்து கீரையை மசித்து சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய மனோகரி அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா