மசாலா பப்பட்

தேதி: January 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தேவா அவர்கள் வழங்கியுள்ள மசாலா பப்பட் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தேவா அவர்களுக்கு நன்றிகள்.

 

அப்பளம் - 2
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
உப்பு - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
முந்திரி, பிஸ்தா - தேவையான அளவு
துருவிய சீஸ் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள், மிளகு, சீரகத் தூள் - தலா கால் தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அப்பளங்களை அடுப்பிலோ அல்லது மைக்ரோவேவிலோ சுட்டு எடுக்கவும்.
அப்பளத்தின் மேல் மிளகாய்த் தூள், மிளகு சீரகத் தூள் தூவி காய்கறி கலவையை வைக்கவும்.
துருவிய சீஸ், முந்திரி, பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கல் மசாலா பப்பட்.. சூப்பர்ம்மா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பர்! மசாலா பப்பட் பார்க்க சல்சா பப்பட் போன்றே இருக்கு.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய தேவா அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

ரேவதி,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

வாணி,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா