சீரகம் உளுந்து மாவுருண்டை

தேதி: January 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சீதாலெஷ்மி அவர்களின் சீரகம் உளுந்து மாவுருண்டை குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சீதாலெஷ்மி அவர்களுக்கு நன்றிகள்.

 

சீரகம் - 2 மேசைக்கரண்டி
வெள்ளை உருட்டு உளுத்தம்பருப்பு - 4 மேசைக்கரண்டி
வெல்லம் - 4 மேசைக்கரண்டி
பனங்கற்கண்டு - 2 மேசைக்கரண்டி
நெய் - 6 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி


 

வெல்லத்தை பொடி செய்து வைக்கவும். நெய்யை லேசாக சூடுப்படுத்தி, உருக்கி வைக்கவும்.
வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
அதே போல் சீரகத்தையும் வெறும் வாணலியில் பொரிய விட்டு எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் பொரித்த சீரகம், வறுத்த உளுத்தம்பருப்பு, பொடித்த வெல்லம் ஆகியவற்றை போட்டு பொடிக்கவும். பொடித்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பொடித்து வைத்திருக்கும் மாவுடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். உருக்கி வைத்திருக்கும் நெய்யை, சிறிது சிறிதாக ஊற்றி, சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். சீரகம், உளுந்து மாவுருண்டை தயார்.

பனங்கற்கண்டை பொடித்து மாவுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும். இங்கு கிடைக்காததால் சேர்க்க முடியவில்லை


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய சமையல் ராணி கவிதாவிற்கு வாழ்த்துகள்.. அனைத்து படங்களும் சூப்பர் கவி... ஒவ்வொரு குறிப்பும் ரொம்ப நல்ல செய்திருக்கீங்க.. படங்களும் பளீச்சென்று இருக்கு.. சீரக உளுந்து மாவுருண்டை சத்தான குறிப்பு.. கடைசி படம் சீரக உளுந்து மாவுருண்டையுடன் அந்த மீன் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறேன்.. ;)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இன்றைய சமையல் ராணி கவிதாவிற்கு வாழ்த்துகள்.. அனைத்து படங்களும் சூப்பர்

இன்றைய‌ கிச்சன் குயின் கவிக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்புகளும், படங்களும் சூப்பரா இருக்கு. சீரகம், உளுந்துமாவு உருண்டை அருமையா இருக்கு.என் அம்மா இதுல‌ கருப்பட்டி சேர்த்து செய்து கொடுப்பாங்க‌. வாழ்த்துக்கள் கவி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இது வரைக்கும் நான் இந்த உருண்டை கேள்விப் பட்டதே இல்லை. சத்தானதும் கூட. டிரை பண்ணிப் பார்த்து விட்டு சொல்லுகிறேன். எல்லா குறிப்புகளும் அருமை :) ஒரு டவுட்டுங்க, பால் சேர்த்து உருண்டைப் பிடிக்கலாமா? ஒட்டிக் கொள்ளுமோ ?

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய சீதாம்மா அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

ரேவதி,
எடுத்துகோங்க..
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

நிஸா,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

சுமி,
புதுமையா இருக்கு .. கருப்பட்டி ஐடியா நல்ல இருக்கு .. நன்றி
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

வாணி,
நெய்யில் பிடிக்கவே நன்றாக வந்தது..
1 வாரம் வைத்து சாப்பிட்டோம்.ட்ரை பண்ணிட்டு சொல்லுங்கோ..
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா