நூடுல்ஸ் வறுவல்

தேதி: January 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. செய்யது கதீஜா அவர்கள் வழங்கியுள்ள நூடுல்ஸ் வறுவல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கதீஜா அவர்களுக்கு நன்றிகள்.

 

நூடுல்ஸ் - 200 கிராம்
முட்டைக்கோஸ் - 200 கிராம் (மெல்லியதாக நறுக்கவும்)
கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
குடைமிளகாய் - 2 (சிறுத் துண்டுகளாக நறுக்கவும்)
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நூடுல்ஸை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். முழுவதுமாக வேக விட வேண்டாம்.
பிறகு வெந்த காய்கறி கலவையோடு உப்பு, மிளகுத் தூள், தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், சர்க்கரை கலந்து மீண்டும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். கொதித்ததும் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கடைசியாக வறுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான நூடுல்ஸ் வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நூடுல்ஸ் வறுவல் நன்றாக உள்ளது.உங்களது எல்லா குறிப்பும் சூப்பர். இன்றைய கிச்சன் குயின்க்கு எனது வாழ்த்துக்கள் .

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

நூடுல்ஸ் வறுவல் புதுமையா இருக்கு... சிம்பிளாவும் இருக்கு... கிச்சன் குயின்‍=கு வாழ்த்துகள்

"எல்லாம் நன்மைக்கே"

நூடுல்ஸ் வறுவல் சூப்பர் ரேவா.. நிச்சயம் ட்ரை பண்ணிட்டு போட்டோ போடுறேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நூடுல்ஸ் வறுவல் வித்தியாசம புதிதா இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

வித்யாசமா சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....