தக்காளி பனீர்

தேதி: January 29, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

திருமதி. மாலினி சுரேஷ் அவர்களின் தக்காளி பனீர் என்கின்ற குறிப்பு கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மாலினி அவர்களுக்கு நன்றிகள்.

 

பனீர்(பால் கட்டி) - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
இஞ்சி - ஒரு சிறிய துன்டு
பச்சை மிளகாய் - 2
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு வேக வைத்து எடுத்து அதன் தோலை நீக்கி மசித்து விடவும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மசித்த தக்காளி விழுதினை ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி கெட்சப், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
அதில் பொரித்து வைத்திருக்கும் பனீரை போட்டு ஒரு முறை பிரட்டி இறக்கவும்.
சுவையான தக்காளி பனீர் ரெடி. தக்காளி கலவையை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. பனீரை அதிக தீயில் வறுக்கக் கூடாது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான சுவையான குறிப்பு சூப்பர்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.