ஆலு பனீர் சப்ஜி

தேதி: January 29, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜெயந்தி அவர்களின் ஆலு பனீர் சப்ஜி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 3
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 3
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
என்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் தாளித்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு பனீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்ததும் கரம் மசாலா தூள், மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான ஆலூ பனீர் சப்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆலு பனீர் சப்ஜி சோ கலர்புல் அக்கா இது ஒன் ஆப் மை ஃபேவரிட் டிஷ் .. பெஸ்ட் காம்பினேஷன் வித் பட்டர் நாண்.. சூப்பர் ரெசிபி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களோட‌ ஆலுபனீர் சப்ஜி சூப்பர்! கடைசிப்படம் அருமை! ஹோட்டலில் பரிமாறுவதுபோலவே இருக்கு! வாழ்த்துக்கள்.