எனக்கா௧ கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்௧ள் அட்மின் அண்ணா மற்றும் தோழிகள் அனைவரும்

எனக்கு வருகின்ற திங்௧ள் கிழமை மாலை பித்தப்பையில் கல் இருப்பதால் மாத்திரையில் குணபடுத்த முடியாத காரணத்தினால் ஆப்ரேஷன் மூலம் பித்தப்பையை அ௧ற்ற முடிவு பண்ணி உள்ளனர்

லேப்ரோஸ்கோபி மூலம் பித்தப்பையை அகற்ற மருத்துவக்குழு எங்௧ளிடம் கூறி உள்ளனர்

நேற்று மாலை தான் டாக்டர் என்னிடம் இதுபோல் பிரச்சனை இருக்கிறது என்று கூறினார் உடனடியா௧ ஆப்ரேஷன் செய்தால் நல்லது என்றும் கூறியுள்ளார் எனக்கு ஆப்ரேஷன் செய்யக்கூடிய டாக்டர் எனது ௟௧ணவருடைய மாமா பையன் தான்

என்னிடம் கவலை பட தேவையில்லை என்றும் பயம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஆனால் நான் அழுது கொண்டும் பயத்திலும் தான் உள்ளேன் என்னை என்னால் சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன்
எனக்கு இருக்கிற வருத்தம் என்னவென்றால் எனது இரண்டாவது ம௧ளுக்கு 1வயது தான் ஆகிறது அவள் இன்னும் என்னிடம் தாய்ப்பால் குடித்து கொண்டு தான் இருக்கிறாள் திட உணவும் சாப்பிடுகிறாள் பாட்டில் பால் பழ௧ வில்லை
குழந்தை என் அம்மாவிடம் விட்டு சென்றாலும் இருப்பதுஇல்லை மூச்சு திணறும் அழவிற்கு அழுகிறாள் அப்பா அம்மா சமாதானம் செய்தாலும் சமாதானம் ஆ௧வில்லை என்னிடம் வந்தால் மட்டுமே சமாதானம் ஆகிறாள் என்ன செய்வது என்றே தெரியவில்லலை மி௧வும் மனவருத்தத்தில் உள்ளேன்

ஒரு பக்௧ம் என் ம௧ளை நினைத்து கவலை படுகிறேன்
மறுபக்௧ம் ஆப்ரேஷன் செய்து கொள்ளும் அளவிற்கு மனதளவில் தயாரா௧ இல்லை பயத்தில் தான் உள்ளேன்

எனக்கா௧ ௧டவுளிடம் பிரார்த்தனை செய்யுங்௧ள்

kavalai padatheenga.ungalukkaga vendukirom.ellam nallathe nadakkum

கவலை படாதீர்கள் அக்கா...எல்லாம் நன்றாகவே நடக்கும்....உங்களுக்காக வேண்டிக் கொள்கிறோம்.

Payapadathinga ellam nala padiya nadakum..kavala padathinga....

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

கல்யாணி, பயப்படாதீங்க..தைரியமா ஆபரேஷனை முடிச்சுட்டு வாங்க.

குழந்தை அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க..கொஞ்சம் அழுதாலும், பிறகு சமாதானம் ஆகிருவாங்க. பாட்டில் பால் பழக்க முயற்சிக்கலாம், அல்லது ஸ்பூன்ல / டம்ளரில பசும்பாலை கொடுக்க டிரை பண்ணுங்க. கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முடியாத காரியம் இல்லை. கடவுள் துணை இருப்பார். கண்டிப்பாக உங்களுக்காக என் பிரார்த்தனை உண்டு. டேக் கேர்..கெட் வெல் சூன்!

அன்புடன்,
மகி

கவலைபடாதீங்க‌.நல்ல சாமி கும்மிடுங்க‌..ஒன்னும் பன்னாது அக்கா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

என் மகளுக்கு 1 வயது தான் முடிந்திருந்தது என் மகன் பிறந்த போது. என்னிடமே இருந்த குழந்தையை நினைத்து நானும் பயந்தேன். ஆனால் ஆச்சர்யம்... அவள் என்னை மருத்துவமனையில் பார்த்ததும் பேசாமல் என் அம்மாவிடம் போய்விட்டால். சிசேரியன் பண்ணதால 6 மாசம் என்னால் என் மகளை தூக்க கூட முடியல. அவ என்ன நினைச்சாளோ... விட்டுட்டா என்னை தொந்தரவு பண்ணாம. இறைவன் அருளால் எல்லாம் நல்லா நடக்கும், விரைவில் உடல் நலம் பெற்று திரும்பி வாங்க. பயப்படாதீங்க... மனசுல தைரியம் இருந்தா எதையும் தாண்டி வரலாம். கடவுள் நம்பிக்கை இருந்தா எதன் மேலயும் பயமோ கவலையோ வரக்கூடாது. சரியா?? எங்க பிராத்தனைகள் உங்களுக்கு துணை இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்யானி தைரியமாயிரும்மா நீ சீக்கிரம் குனமாகி குழந்தையை கவனிச்சிக்கலாம்.பித்தப்பை ஆபரேச்ன் லேப்ராஸ்கோபி மூலமா எங்கமாமி செஞ்சாங்க ரொம்ப சீக்கிரம் குனமாயிட்டும்மா நீயும் சீக்கிரம் நல்லாயிடுவே கவலைபடாதே நான் துவாசெய்ரேன் உனக்காக

//ஆனால் நான் அழுது கொண்டும் பயத்திலும் தான் உள்ளேன் ////அப்பா அம்மா சமாதானம் செய்தாலும் சமாதானம் ஆ௧வில்லை என்னிடம் வந்தால் மட்டுமே சமாதானம் ஆகிறாள் என்ன செய்வது என்றே தெரியவில்லலை/// சின்னஞ்சிறு குழந்தைகள், தாய் அழுதுகொண்டும் கவலையோடும் இருப்பதைப் பார்த்தால், அவர்களுக்குள் இனம்புரியாத‌ பயமும், கலவரமும் ஏற்படுவது இயற்கையான‌ விஷயம்! அதனாலேயே உங்களால் சமாளிக்க‌ முடியவில்லை!

இந்த‌ ஆபரேஷன், நீங்கள் பயபப்பட்டு அழவேண்டிய‌ அளவுக்கு வலியையும் ,வேதனையையும் கொடுக்கக்கூடியது இல்லை!! நீங்கள் தைரியமாக‌ இருங்கள்.....உங்கள் குழந்தையுடன் எப்பவும் போல‌ கலகலப்பாக‌ இருக்க‌ முயற்சி செய்யுங்கள்! குழந்தை தன்னால் சரியாகிவிடும்!
உங்கள் பயத்தை கடவுளிடம் விட்டுவிடுங்கள்.....

எனக்கா௧ நேரத்தை ஒதுக்கி பதில் அளித்த தோழி௧ள் அனைவருக்கும் நன்றி உங்௧ளது ஆலோசனையை கேட்டுக்கொள்கிறேன் தோழிகளே

ML

நல்லபடியாக நடக்கும் அக்கா.கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். குழந்தை நினைத்து கவலை படாதீங்க.கடவுளிடம் வேண்டுங்கள்.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்