Motion problem

En kulanthaikku 2 nala motion pogala.constipation problem adikadi varuthu.ithukku enna pannalm .pls help.1.5 year baby

Karuvappillai kampil soap nangu thadavu whole la vainga. 2 min la toilet poiruva. En payyanukku na ippadithanga saivenga. Next puli kampu mattum soap illama vaithalay vanthurumga. Next kismiss palathai hot water la nangu pitchu potu sunda kaitchu 3 paledu vutrivudunga.

Thank you robini.kismiss palam evlo kudukanum?? paledu na enna?

Sathya paleduna sanku pa. 10 kissmiss podunga nanku sunda kaitchunga.

அன்புள்ள பூங்கோதை கண்ணம்மாள் ,என் மகள் இரண்டரை வயசு .கொஞ்சம் கொஞ்சமா அடிக்கடி மோசன் போகிறாள் (6,7 தடவைகள் ).எல்லா சாப்பாடுகளும் கொடுக்கிறேன் . குறிப்பாக நார் சத்தும் பச்சை காய்கறிகள் இளஞ் சூடான தண்ணி என்று டாக்டர் சொன்னபடியே கொடுக்கிறேன். ஆனாலும் மாற்றம் இல்லை . டாக்டர் ம் உணவு தண்ணீர் பால் சம்மந்தமா ஆலோசனை தருகிறார் தவிர மருந்து மாத்திரை தேவையில்லை என்கிறார் .இரவில் தாய்ப்பால் குடிக்கிறாள். நிறுத்தும் முயற்சியில் இருக்கிறேன் ,நீங்கள் அறுசுவையில் சொல்லி இருக்கும் கடுக்காய் கொடுத்தேன் வாந்தியா எடுப்பதும் இல்லாமல் உன்னையும் வெறுக்கிறேன் என்று திட்டுகிறாள் .இங்கு குழந்தையை நோகடிக்கும்படி கை வைத்தியம் செய்வது தெரிந்தால் சடடப்படி குற்றம் .ஆனால் கடுமை இல்லாத சில முறைகளை கையாளலாம் .இங்கு (கனடா )வேம்பு இலை தமிழ் கடைகளில் கிடைக்கிறது .ஓமம் கிடைக்கிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் தாருங்கள் .

அன்புள்ள‌ சுரேஜினிக்கு,
கடுக்காய் மலச் சிக்கலை நீக்கும், கடுக்காயின்
பூ பேதியை நிறுத்தும். கடுக்காயும் அதன் பூவும் வேறு வேறு (எதிர்மாறான )குணம் கொண்டவை. கடுக்காயின் துவர்ப்புத் தன்மை
கசப்பு போலத் தான் தெரியும். அதன் துவர்ப்புத் தன்மை தொண்டையை அடைப்பது இருக்கும். ரணங்களை ஆற்றும் தன்மையுடையது. ஓமத்தைக் கருக‌ வறுத்துப் பொடி செய்து அதை மூன்று சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்கவும். அல்லது வெல்லத்தோடு கலந்து
சின்ன‌ உருண்டையாய் உருட்டி குழந்தைக்குப் புரியும்படிக்கூறி விழுங்கச்

சொல்லுங்கள். கருக‌ வறுத்த‌ ஓமம் கரியைப் பொடிசெய்தது போல் தான் இருக்கும். செய்முறையை அவள் கண் எதிரிலேயே செய்து காட்டிப்
புரிய‌ வைத்தால் மறுக்க‌ மாட்டாள் என்று நினைக்கிறேன்.( சில‌ வெளி நாட்டு உணவுகளை கரியடுப்பில் செய்வது போல‌/ அதாவது உணவைப்
பக்குவப் படுத்திய‌ பின்னால் ஒரு கரித்துண்டை தீப் பற்ற‌ வைத்து அதை
அந்த‌ உணவோடு வைத்து ஒரு பெரிய‌ மூடியைப் போட்டு மூடி விட்டு
அது அணைந்த‌ பின் எடுத்து உண்பது போல‌ என்று சொல்லலாம்
என்று நினைக்கிறேன், முயன்று பாருங்கள்.
கருகாமல் நன்கு வறுத்த‌ ஓமத்தை குடிக்கும் நீரில் போட்டுக் கொதிக்க‌ வைத்து (வேண்டுமானால் சீரகத்தையும் வறுத்துச் சேர்க்கலாம்)
பொதுவாக‌ எல்லோரும் குடிக்கும் படி வைத்து விடுங்கள்.
கருகாமல் பொரித்த‌ ஓமத்தை கோதுமை ரொட்டி, பஜ்ஜிமாவு
காய்கறிகளின் சாலட் இவற்றில் வறுத்த‌ சீரகத்தையும் சேர்த்துச்செய்யவும்
மூன்று சிட்டிகைக்கு மேல் வேண்டாம். அதிகமானால் கசப்பு தட்டும்.
அதே போல‌ மாம்பருப்பை அரைத்து நாம் வழக்கமாக‌ வைக்கும்
காரக் குழம்பில் சேர்த்துக் கொதிக்க‌ வைத்துக் கொடுக்க‌ அளவுக்குமீறிப்
போகும் பேதியையே கட்டுப் படுத்தும்.
சுண்டைக்காய் வற்றலைப் பொரித்து (மோர்+உப்பிட்ட‌ சுண்டை
வற்றல்) சுடுசோற்றுடன் நெய் கலந்து உண்ண‌ கட்டுப்படும், சும்மாவே
வற்றல் பொரித்துத் தின்னும் வழக்கம் இருந்தால் ஸ்னாக்ஸ் மாதிரி
கொரிக்கலாம். மற்ற‌ சாம்பார், கூட்டு, தயிர் சோற்றுடன் பக்க‌ உண்வாக‌
தொட்டுக்கொள்ளலாம்.
வேப்பங்கொழுந்து, வறுத்த‌ மிளகு சீரகம் (கிடைத்தால் கல் உப்பு )
இவற்றை நன்கு மைய‌ அரைத்து சிறு உருண்டைகளாக‌ மாத்திரை போல‌
உருட்டிக் காயவைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒருநாள் தலைக்குக்
குளிக்கும் நாளில் இரண்டு உருண்டைகளை விழுங்கவையுங்கள். கூடவே
சாக்லேட் நான்கை போனஸாகக் கொடுத்து விடுங்கள். இல்லையானால்
ஏப்பம் விடும்போது வேப்பிலையின் கசப்பு வாசம் வரும். வேப்பிலையின்
கசப்பினைக் குறைக்கத்தான் உப்பையும் சேர்ப்பது. சுவையில் மாற்றம்
இருக்கும். வயிற்றுப் பூச்சிகளைக் கொன்று விடும்.
பாதாம் பிசின் (கோந்து) கிடைக்குமானால் அதை வாங்கித் தூள்
செய்து அதில் இருக்கும்மரச் சக்கைகளை நீக்கி விட்டு அரை டீஸ்பூன்
அளவு கொதிக்கும் பாலில் கலந்தால் நன்கு ஊறி பொது பொதுவென்று
இருக்கும், அதனோடு சர்க்கரை கலந்து உண்டால் பேதியே நிற்கும்,
வயிற்று ரணம் ஆறும். மதுரை ஜிகிர்தண்டாவில் இது தான் முக்கியமான‌
பொருள். சாதாரணமாக‌ தமிழ்நாட்டில் குளிர்பானங்களில் கலப்பார்கள்.
வயிற்றுக் கோளாறு உள்ள‌ போது காய்கறிகளைப் பச்சையாக‌
உண்பது என்பது எனக்கு உடன் பாடாகப் படவில்லை. சீரணமாகாது,
காய்கறிகளில் உரமாகப் பயன்படும் இரசாயன‌ உரங்களின் நிலைப்பாடு
இவையும் காரணமாகலாம் என்பது என் கருத்து.
தாய்ப் பாலைத் தவிர‌ மற்ற‌ பாலைத் தற்போது நிறுத்தி விட்டு
தயிர் மோர் என்று தந்து பாருங்கள். என்ன‌ பலன் என்று பார்க்கவும்.
வேறு சில‌ பதிவுகளையும் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மிக்க நன்றி.மிகவும் தெளிவான பதில்.ஓமம் என்னிடம் இருந்தது .கருக வறுத்து வச்சுட்டேன்.

பச்சை காய்கறிகள் என்று கடும் பச்சை நிற காய்கறிகளை சொன்னேன்.மன்னிக்கவும் .என் டாக்டர் கிரீன் வெஜிடபிள் கிரீன் வெஜிடபிள் என்பார்.இதுதான் தமிழோடு விளையாட கூடாது .

ஓ சீரகம் விருப்பம் மகளுக்கு.பழக்கி வைச்சிருக்கேன்.நானும் சிறு வயதில் சீரக தண்ணீர் குடித்ததாக ஞாபகம்.தந்தை வழி ஆயுள்வேத வைத்தியர்கள்.அதனால் பாவக்காயை பச்சையாக தின்பதும் ,குறிஞ்சா இலையை பச்சையாக சாப்பிடுவதும் {டாடி யை பார்த்து} இப்படி நிறைய சாதாரணமாக விரும்பி சாப்பிட கற்று வைத்திருக்கிறேன்.
அதன் பிரகாரம் நீங்கள் சொல்வதும் எனக்கு நன்கு விளங்குகிறது.

ம்ம் இது சம்மந்தமான உங்கள் பதிவுகள் எல்லாம் எக்ஸாம் க்கு படிக்கிறதுமாதிரி படிச்சு வச்சிருக்கேன்.இம்ஸ் ஐ கேட்டு பாருங்கோ.

செய்து பாத்து சொல்றேன் .மீண்டும் நன்றி

அன்புள்ள பூங்கோதை அம்மா ஏதோ கொஞ்சம் சரியானால் கூட பரவாயில்லை என்று உங்களிடம் கேள்வி வைத்தேன்.இப்போது மகளுக்கு முழுவதும் சரியாகிவிட்டது.நீங்கள் சொன்னதுபோல் நான் குடிக்கும் நீரிலும் ஓமம்,ஜீரகம் கலந்ததும் நன்கு வேலை செய்ய தொடங்கி விட்டது.ஓமமும் கருக வறுத்து கொடுத்தேன்.

டாக்டர் முதலே சொல்லி இருந்தார் .திட உணவு கொடுக்க தொடங்கிய பின்னர் தண்ணியை விட அதிகமாக தாய்ப்பால் கிடைத்தால் இப்படி செய்யும் என்று அதனால் நீங்கள் ஓமம் கல்ந்த தண்ணி என்னையும் குடிக்க சொன்னது நல்ல பலன் தந்துவிட்டது.

மிக்க நன்றியும் என் அன்பும் .

மேலும் சில பதிவுகள்