pls.... help me என் கணவருக்கு வேலை விஷியம் யு கே போகும் வாய்ப்பு உள்ளது...அதற்கு முன் நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பலாம் only 2 months
pls.... help me என் கணவருக்கு வேலை விஷியம் யு கே போகும் வாய்ப்பு உள்ளது...அதற்கு முன் நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பலாம் only 2 months
Anitha
uk la sappadu own preparationa.
anitha
சப்பாத்தி - இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம், தக்காளி தொக்கு, பூண்டு ஊறுகாய் - பத்து நாட்கள் வைத்து கொள்ளலாம். மாங்காய் ஊறுகாய், இட்லி பொடி, பருப்பு சாத பொடி வெகு நாட்கள் கெடாமல் இருக்கும். இவை நான் வழக்கமாக என் கணவர் வெளியூருக்கு செல்லும் போது குடுத்து அனுப்புவது. இத்தோடு சமையல் செய்வதற்கு எளிதாக இருக்க புளி பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், தாளிக்க வடகம் அப்புறம் பொடிக்கு உற்றிக்கொள்ள நல்லெண்ணெய், மசாலா பொடி, அரிசி, பருப்பு, சாம்பார் பொடி, ரச பொடி, அப்பளம் எல்லாம் கொஞ்சம் கொடுத்து விடலாம்.
அனிதா
உங்கள் கணவர் செல்லுமிடம் தமிழர்களும்,இந்தியர்களும் அதிகம் வாழும் பகுதியாக இருந்தால், அங்கு கட்டாயமாக ஒரு இந்திய உணவகமோ அல்லது தமிழர்கள் நடத்தும் உணவகமோ இருக்கும்! இந்தியன் ஸ்டோர்ஸும் இருக்கும்! அதனால் உணவிற்கு பிரச்சனை இருக்காது!
அப்படி இல்லையென்றால்,நீங்கள் காயத்திரி சொல்லியிருப்பதுபோல எதுவேண்டுமோ குடுத்துவிடலாம்! டிரை மசாலா சப்பாத்திகள் (அப்பளம்போலவே இருக்கும்) கடைகளில் கிடைக்கின்றன! அது ரொம்ப உபயோகமுள்ளதா இருக்கும்!
food தயார் செய்து கொடுது அனுப்பல
\\pls.... help me நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பல\\
தோழி அனிதா, ஏன் கஷ்டப்பட்டு தயார் பண்ணி கொடுத்து அனுப்பல?
இன்னும் ஒண்ணு, உங்க கணவருக்கும் சமைக்க ஆர்வம் இருந்தா மட்டுமே, நீங்க குடுத்து அனுப்புறது காலியாகும். இல்ல பேக்கிங் ரிடர்ன் ஆகும்.
2 மாசம் தான, புது இடம், புது உணவு.. டேஸ்ட் பண்ணி, எப்படி பண்ணுறதுன்னு உங்களுக்கும் சொல்லிக் கொடுத்தா அடுத்த கிச்சன் குயின் ஆகிடலாம்.
உடல் நலம், கண்டிப்பா இங்க உள்ள உணவு முறை பாலோ பண்ணனும்னா, தோழி காயத்ரி அவங்க சொன்னதுதான்
உன்னை போல் பிறரை நேசி.
ரசிக்க விடுங்க
//வேலை விஷியம் யு கே போகும் வாய்ப்பு உள்ளது...அதற்கு முன் நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பலாம் // இதான் முதல் தடவையா யூகே போறாங்க என்று நினைக்கிறேன். ஒண்ணும் கொடுத்து அனுப்ப வேணாம்.
பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போனா பண்ற வேலை இது. வெளிநாடு போறப்ப.... கர்ர். நான்னா கொண்டு போக மாட்டேன். போய் நிம்மதியா என்ஜாய் பண்ணிட்டு வரட்டுமே! வந்து உங்களுக்கும் விபரம் சொல்லுவாங்க. ரெண்டே ரெண்டு மாசம் தானே கிடைக்கப் போகுது. அப்ப கூட உங்க சாப்பாட்டைத் தானா சாப்பிடணும்! ரெண்டு வருஷம்னா கொடுத்து அனுப்பலாம். தவிர... ஃப்ளைட் அலவன்ஸ் எத்தனை கிலோ! நீங்க இதுல்லாம் போட்டு பாரம் ஏத்தாதீங்க. கட்டாயம் கொடுத்து அனுப்ப வேணுமானா... அவங்கள்ட்ட கேளுங்க, உங்க எந்த சமையலை மிஸ் பண்ணுவாங்கன்னு. முடிஞ்சா அதை மட்டும் கொடுத்து அனுப்பலாம். அங்க எல்லாமே.. உங்க ஊர்ல கிடைக்காத தமிழகத்து உணவுகள் கூட கிடைக்கும்.
யூகே சாப்பாடு, அங்கு உள்ள தமிழகத்து உணவு விடுதிகள், அங்குள்ள இந்திய நண்பர்களின் உணவுப் பழக்கம்னு அறிஞ்சுக்க ஒரு சந்தர்ப்பம் அமையுது. வேலை இல்லாத சமையம் ஊர் சுத்திப் பார்க்கட்டும். சோஷலைஸ் பண்ணட்டும். அதை விட்டுட்டு சமைக்கணும் என்று எதிர்பார்க்காதீங்க. அனேகம்... நீங்க கொடுக்கிறது எல்லாம் அங்க யாருக்காச்சும் அன்பளிப்பா கொடுத்துட்டு... முடியாட்டா பின்ல போட்டுட்டு அந்த எடைக்கு உங்களுக்கு கிஃப்ட் வாங்கிட்டு வருவாங்க. :-)
உடல் ஆரோக்கியம் பற்றி... குழந்தை இல்லையே அவங்க! அவங்களே பார்த்துப்பாங்க.
- இமா க்றிஸ்
க்றிஸ்மஸ்
//தோழி அனிதா, ஏன் கஷ்டப்பட்டு தயார் பண்ணி கொடுத்து அனுப்பல? // எப்புடில்லாம் சந்தேகம் கேட்கறீங்க!! குழப்படி க்றிஸ்மஸ்... :-)))
- இமா க்றிஸ்
இல்ல அனுப்பலாம்னு தான் கேட்க
இல்ல அனுப்பலாம்னு தான் கேட்க வந்தேன்....sorry
நான் outing போய்டேன் இப்போ
நான் outing போய்டேன் இப்போ தான் உங்க reply பார்தேன்.sorry late ஆயிடுச்சு தப்பா நினைக்காதீங்க.sorry friends
இல்ல hotel rubini .first time
இல்ல hotel rubini .first time போராங்க. அதுவும் வேர country அதான் பயமா இருக்கு
thank u very much gaythri....
thank u very much gaythri....