வெனெஷியன் ப்ளைண்டைச் சிறியதாக்குவது எப்படி? பாகம் - 2

தேதி: January 29, 2015

5
Average: 5 (3 votes)

ரெடிமேட் ப்ளைண்டுகள் சாதாரணமாக குறிப்பிட்ட சில நீள அகலங்களில்தான் கிடைக்கும். ஜன்னல் அகலத்தை அளந்து கொண்டு அதற்கேற்ப ப்ளைண்டை வாங்கிக் கொண்டால் உயரத்தைச் சுலபமாக நீங்களே உங்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.

 

கத்தரிக்கோல்
கூர் முனைக் குறடு (Nose pliers)
ஸ்க்ரூ ட்ரைவர்
லைட்டர்

 

அடியிலுள்ள மொத்தமான பலகையில், முன்பு தக்கைகளை எடுத்துவிட்ட குழிகளினுள் அடங்கியிருக்கும் நூல்களை வெளியே எடுக்கவும்.
மொத்தமான அந்தப் பலகையைத் தனியாக உருவி எடுத்து வைக்கவும்.
இனி, தொங்கிக் கொண்டு இருக்கும் ப்ளைண்டில் அடியிலுள்ள பலகையை உருவி எடுக்கவும்.
நீக்கிய பலகைக்குப் பதிலாக அந்த இடத்தில் உருவி எடுத்து வைத்திருக்கும் மொத்தமான பலகையைச் சொருகவும்.
துளைகளினூடாக ஓடும் நூல், வெட்டிய இடத்தில் சிலும்பியிருந்தால் சிறிது சூடு காட்டி அழுத்தி ஒட்டிக் கொள்ளவும்.
ஒட்டிய நூலை மொத்தமான பலகையின் துளையுள் மேலிருந்து கீழாக நுழைத்து எடுக்கவும்.
ஆரம்பத்திலிருந்தது போல தக்கைகள் வழியே நூலை நுழைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
தேவைக்கு மேல் உள்ள நூலை வெட்டி நீக்கவும்.
ப்ளைண்டை உயர்த்தி இறக்குவதற்காக உள்ள பிரதான நூல்கள் அனைத்தையும் சேர்த்தாற்போல் பிடித்து ஒரு முறை ப்ளைண்டை உயர்த்தி இறக்கவும்.
மொத்தப் பலகையின் கீழ் தெரியும் இரண்டு ஓர நூல்களையும் ஸ்க்ரூ ட்ரைவரினால் தக்கைக் குழியுள் தள்ளிப் பிடித்தபடி தக்கையை நன்கு இறுக்கிவிடவும்.
இப்பொழுது உங்கள் ஜன்னல் அளவிற்குக் கச்சிதமாக ப்ளைண்ட் மாறி இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்