கொள்ளு சட்னி, சுண்டல், துவையல்

தேதி: January 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுகந்தி அவர்கள் வழங்கியுள்ள கொள்ளு சட்னி என்கின்ற குறிப்பு, சில மாற்றங்கள் செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுகந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

கொள்ளு சட்னி செய்ய :
கொள்ளு - ஒரு கப்
பூண்டு - 3
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை
வரமிளகாய் - 3
கொள்ளு சுண்டல் :
வேக‌ வைத்த‌ கொள்ளு - ஒரு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவைக்கேற்ப‌
கொள்ளு துவையல் செய்ய :
கொள்ளு - ஒரு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தேங்காய் ‍- கால் கப் (அ) 5 சில்லு
வரமிளகாய் - 2


 

கொள்ளை 3 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.
பிறகு வேக வைத்த கொள்ளுடன் வதக்கி ஆற வைத்தவற்றை சேர்த்து அரைக்கவும். சூடு சாப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சட்னி. காரம் தேவைக்கு தகுந்தாற் போல் மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
கொள்ளு சுண்டல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வேக‌ வைத்த‌ கொள்ளை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும். சுவையான‌ கொள்ளு சுண்டல் தயார்.
கொள்ளு துவையல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளை வறுத்து தனியே வைக்கவும்.
பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி ஆற வைத்து வறுத்த‌ கொள்ளுடன் சேர்த்து அரைத்தால் கொள்ளு துவையல் தயார்.
கொள்ளை வைத்து எளிமையாக செய்யக்கூடிய சத்தான, சுவையான கொள்ளு சட்னி, கொள்ளு சுண்டல், கொள்ளு துவையல் தயார். கொள்ளு கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கறீங்க :) படங்கள் பளிச் பளிச்... அருமையா இருக்கு. வாழ்த்துக்களூம், பாராட்டுக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் பாலநாயகி. எல்லாக் குறிப்புகளும் அருமை.படம் எல்லாம் பளீர்ன்னு இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அனைத்து குறிப்புகலும் அழகு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

அன்புடன்
பாரதி வெங்கட்

வாழ்த்துக்கள் பாலநாயகி. எல்லாக் குறிப்புகளும் அருமை.

இதுவும் கடந்து போகும்

நன்றி வனி அக்கா. எல்லாமே உங்களால‌ தான். உங்க‌ கிட்ட‌ இருந்து கத்துகிட்டது தான்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி சுமி & பாரதி.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றிகள் பல‌ கவிதா.

எல்லாம் சில‌ காலம்.....