தேதி: January 31, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ரோஸ்மெரி நெட்டுகள் - 4
டீ பாக்ஸ் - 2
சீனி & பால் - அவரவர் சுவைக்கேற்ப
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

சுத்தம் செய்து அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் போட்டு ஒன்றரை கோப்பை கொதிநீர் ஊற்றி மூடி, குறைந்தது பத்து நிமிடங்கள் ஊற விடவும்.

இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் பொழுது, இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டு வரவும்.

இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக் கொள்ளவும்.

கிண்ணத்திலிருந்து டீ பாக்கை எடுத்து விட்டு பரிமாற போகும் டீ கோப்பையில் தேநீரை ஊற்றிக் கொள்ளவும்.

தேவைக்கு பால் மற்றும் சீனி சேர்த்துக் கலக்கவும்.

சுவையான, புத்துணர்ச்சியூட்டும் ரோஸ்மெரி டீ தயார்.

ரோஸ்மெரி டீ தலைவலி, தடிமல் வேளைகளில் இதம் தரும். பூக்கள், மொட்டுகள் & பூச்சிகள் இல்லாத இளம் ரோஸ்மெரி நெட்டுகளை மட்டும் தெரிந்துக் கொள்ளவும்.
Comments
ரோஸ் மேரி
ரோஸ் மேரி நீ ஒரு ஜீஸ் மாரி.. இமா அம்மா வித்தியாசமான பெயர்.. இப்படி உங்களாலா இப்படியெல்லாம் செய்ய முடியுது.. நீங்க செய்கின்ற அனைத்து சூப்பர்மா.. கலக்குறீங்க டீச்சர்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரோஸ்மெரி
இமா ரோஸ்மெரி என்றால் மருக்கொழுந்தா?
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரோஸ்மெரி
மருக்கொழுந்து இல்லை அருள். இன்னொரு herb. வாசனையா இருக்கும். தோட்டத்துல வேலியாக, ground cover ஆக எல்லாம் வளர்ப்பார்கள். rosemary என்று கூகுள் இமேஜ் பாருங்கள் புரியும்.
- இமா க்றிஸ்
ரோஸ்மெரி டீ
இது எல்லாரும் பண்ணுறதுதான் ரேவ்ஸ். இங்க இருக்கிறதால வித்தியாசமான விடயங்களுக்குப் பொருள் கிடைக்குது. சாதாரணமானதை தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது. ;)
- இமா க்றிஸ்
இமாம்மா
ரோஸ்மேரி டீ எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அந்த பிளேவர்ல டீ வாங்கி வெச்சு இருக்கேன். சர்க்கரை, சீனி சேர்த்து குடித்ததில்லை. பிளைன் டீ தான் குடிச்சு இருக்கேன். ஒரு வாட்டி இப்படி குடிச்சு பார்க்கிறேன். கடைசி படத்தில் உள்ள டீயை அப்படியே எடுத்து குடிக்கலாம் போல இருக்கு. ..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
இமா
எங்க ஊரில் புதினா டீ, உங்க ஊரில் ரோஸ்மெரியா?? ;) மாலேவில் இந்த டீயை அதிகமா பார்த்திருக்கேன்.. ஆனால் குடிச்சதில்லை. இப்ப ரோஸ்மெரி... கிடைச்சா செய்துடுறேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரோஸ் மேரி இமா இப்படி நீங்க
ரோஸ் மேரி இமா இப்படி நீங்க செய்கின்ற அனைத்து சூப்பர்.கலக்குறீங்க
ரோஸ்மெரி= இமா
இமா // இன்னொரு herb. வாசனையா இருக்கும்.// நீங்க சொன்னது போல கூகுள் இமேஜ் பார்க்கவும் தெரிஞ்சிடுச்சு. நான் இந்த இலையை நுகர்ந்திருக்கேன். இங்க அக்ரி யூனிவர்ஸிட்டில யோகா அன்ட் ஹெர்பல் நேஷனல் கான்ஃப்ரன்ஸ் நடந்தது. அதில நிறைய மூலிகைகள் இருந்தது.
அதில ரோஸ்மெரியும் இடம்பிடிச்சிருந்தாங்க. ஆனா பேர் மறந்திட்டேன். படம் பார்த்த உடனே தெரிஞ்சுக்கிட்டேன். ரொம்ப நன்றி இமா.
//மருக்கொழுந்து இல்லை// ஸாரி, இமா படத்தில ரோஸ்மெரி தூரத்தில இருக்காங்களா அதுனால ஐ ஸ்லிப் ஆகிடுச்சு.
தேநீரும், தேநீர்க் கோப்பைகளும் மிக அழகு :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.