சிக்கன் ப்ரைட் ரைஸ்

தேதி: January 31, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பாஸ்மதி ரைஸ் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
சிக்கன் 65 - 1 கப்
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 5


 

பாஸ்மதி அரிசியை அலசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரைஸ் குக்கரில் உதிரியாக வடித்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கவும்.
சிக்கன் 65 செய்து அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பேனில் நெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
நன்கு வதக்கக்கூடாது ஓரளவு வதக்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். குழைய வதக்க வேண்டாம்.
வெங்காயம் தக்காளியுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். முட்டையை நன்கு குத்தி விடவும். பிரிந்து பொடி பொடியாக இருக்க வேண்டும்.
முட்டை நன்கு வெந்து பொடியானதும் சிறியதாக நறுக்கி வைத்துள்ள சிக்கன் 65 போட்டு கிளறவும். பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு இந்த முட்டை சிக்கன் கலவையில் வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறவும். கடைசியாக மிளகுத் தூள் தூவி கிளறவும். சுவையான எளிதில் செய்யக் கூடிய சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

கோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் ஃப்ரைடு ரைஸ் சூப்பரா இருக்கு ரேவ். கடைசி படம் அழகு. வாழ்த்துக்கள் மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஃப்ரைட் ரைஸ் நல்லா உதிரி உதிரியா சூப்பரா வந்துருக்குங்க‌....

ஐய் சிக்கன் ஃபிரைட் ரைஸ் சூப்பர் ரேவ். சிம்பிள் ரெசிபி

Be simple be sample

சிக்கன் ப்ரைட் ரைஸ் சூப்பரா இருக்கு..

முன்னொரு காலத்தில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட கேங்கா இரவு நேரம் ரோட்டை மடக்கிட்டு நடந்து போவோம்... அது ஒரு நிலா காலம் ;) இப்ப இப்படி வீட்டுலையே செய்து சாப்பிட வேண்டியது தான் :( படம் போட்டு பழசை எல்லாம் கிளறிவிட்டுட்டீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதி
ஃப்ரைட் ரைஸ் நல்லா உதிரி உதிரியா சூப்பரா வந்துருக்கு

சிக்கன் ஃப்ரைடு ரைஸ் பார்க்கும்போதே நல்லா டேஸ்டியா இருக்கும்னு தோணுது. சூப்பர்ப்ங்க‌

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!