பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ்

தேதி: February 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

பாசுமதி அரிசி - 2 ஆழாக்கு (400 கிராம்)
பேபி கார்ன் - கால் கிலோ
காரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லித் தழை - 100 கிராம்
புதினா - 100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து வடிகட்டி பாலெடுத்து அரிசியுடன் சேர்த்து உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பேபி கார்ன், காரட், பீன்ஸ், பட்டாணி (பச்சை பட்டாணி) ஆகியவற்றை போட்டு சிறு தீயில் வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவை போட்டு நன்கு வதக்கவும்.
கடைசியாக உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
நெய்யை மேலே ஊற்றி ஒரு முறை கிளறி இறக்கவும். சுவையான பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள். ஃபிரைட் ரைஸ் அழகாக செய்து காட்டியிருக்கீங்க பாரதி. மேலும் மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்க மீண்டும் வாழ்த்துக்கள் :)

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

அன்புடன்
பாரதி வெங்கட்