வெஜ் ஃப்ரூட் சாலட்

தேதி: February 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - ஒன்று
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
மாதுளை - பாதி
வெள்ளரிக்காய் - ஒன்று
சாத்துக்குடி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
தக்காளி - ஒன்று
தயிர் - ஒரு கப்
ஃப்ரெஷ் க்ரீம் அல்லது பால் ஏடு - அரை கப்
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, குடைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு மற்றும் குடைமிளகாயை பொரித்து எடுத்து எண்ணெயை வடிய விடவும்.
மாதுளையை உதிர்த்துக் கொள்ளவும். ஆப்பிள், சாத்துக்குடி, தக்காளி, வெள்ளரியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் பழ வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் குடைமிளகாயை போடவும்.
அதனுடன் தயிர், ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத் தூள், சர்க்கரை, உப்பு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹெல்தி சாலட்.. அருமை... இது போலவே செய்து பார்க்கிறேன்..நன்றி

"எல்லாம் நன்மைக்கே"