தக்காளி ஓட்ஸ் அல்வா

தேதி: February 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. இளவரசி அவர்களின் தக்காளி ஓட்ஸ் அல்வா என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய இளவரசி அவர்களுக்கு நன்றிகள்.

 

தக்காளி விழுது - ஒரு கப்
ஓட்ஸ் - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
பால் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
பிஸ்தா துருவல் - அரை கப்
உப்பு - சிட்டிகை
நெய் - 2 மேசைக்கரண்டி


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் வெடிக்கும் வரை வைத்திருக்கவும்.
சூடு ஆறியதும் எடுத்து தோல் உரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் ஊறிய ஓட்ஸை எடுத்து வடிகட்டியில் பிழிந்து பால் எடுக்கவும்
மிக்ஸியில் சர்க்கரையை போட்டு பொடி செய்துக் கொள்ளவும். பிஸ்தாவை தோல் உரித்து துருவி கொள்ளவும்.
தக்காளி விழுது, ஓட்ஸ் பால், ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும். இடையில் ஒரு முறை எடுத்து கிளறி விடவும்
பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும்
அதன் பிறகு வெளியில் எடுத்து கிளறி பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த் தூள் மீதமுள்ள நெய், பிஸ்தா துருவல் சேர்த்து கிளறி மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் மீடியமில் வைக்கவும். ஒவ்வொருமுறை வைக்கும் போதும் இடையில் எடுத்து கிளறி வைக்கவும்
கடைசியாக வெளியில் எடுத்து நன்கு கிளறி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டவும். சுவையான தக்காளி ஓட்ஸ் அல்வா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு என் நன்றி.

அன்புடன்
பாரதி வெங்கட்

ஆஹா செம்மயா இருக்கு சூப்பர்ர் இது சுவை எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்களேன் செய்து பார்க்கிறேன் :) வாழ்த்துக்கள் பாரதி

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பொதுவாகவே எனக்கு தக்காளி சுவை ரொம்ப பிடிக்கும். இந்த அல்வால லேசா தக்காளி மற்றும் ஓட்ஸ் வாசனையோட எனக்கு பிடித்த மாதிரி இருந்தது. ட்ரை பண்ணிபாருங்க. செய்வதும் சுலபம் தான்.

அன்புடன்
பாரதி வெங்கட்