பாகற்காய் கூட்டு

தேதி: February 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

0
No votes yet

திருமதி. மனோகரி அவர்களின் பாகற்காய் கூட்டு என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

பாகற்காய் - அரைக் கிலோ
கடலைப்பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 4
தக்காளி - 4
தக்காளி விழுது - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - 2 தேக்கரண்டி


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைக்கவும். பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை போட்டு பொரிந்ததும் சீரகம் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதன் பின்னர் பாகற்காயை சிவக்க வதக்கி அதையும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கி விட்டு மஞ்சள் தூள், தனியாத் தூளைப் சேர்த்து அதை தொடர்ந்து பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் கிள்ளு பதமாக வெந்த கடலைப்பருப்பு, தக்காளி விழுது, வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் ஒரு கப் பருப்பு வேக வைத்த தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் சேர்த்து நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கி விடவும்.
இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிச்சன் குயின். கூட்டு சூப்பர். படங்களும் நல்லா வந்திருக்குது.
நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

பாகற்காய் கூட்டு பார்க்கவே நல்லா இருக்கு... படங்களும் செய்முறையும் சூப்பர்.. வாழ்த்துகள்

"எல்லாம் நன்மைக்கே"

பாகற்காய் கூட்டு வித்தியாசமா நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மெர்சி.

கூட்டு சுவையும் அருமை பாக்யா. நன்றி

மிக்க நன்றி தர்ஷா.

அன்புடன்
பாரதி வெங்கட்